தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து திட்டமிட்டு ஒரு சில தரப்பினர், அதுவும் தங்களை இந்துத்துவா சித்தாந்தவாதி, பாஜக ஆதரவாளர்கள் என்று காட்டி கொண்டு, மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பது போன்று , தொடர்ந்து அண்ணாமலை மீது இவர்கள் போன்ற ஆட்கள் விமர்சனம் செய்வதற்கு பின்னணியில் அண்ணாமலை மீது உள்ள வன்மம் தான் என்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.
அண்ணாமலையின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத ஒரு குறிப்பிட்ட சிலர், மேலும் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலை தான் காரணம் என்கிற கிரெடிட் அண்ணாமலைக்கு போகிறதே என்கிற வயித்தெரிச்சல் காரணமாக தற்பொழுது அண்ணாமலை மீது மக்கள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அவருக்கு எதிராக திட்டமிட்டு பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

இது கடந்த சில நாட்களாகவே உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.இந்நிலையில் டெல்லி பாஜக தலைமை , குறிப்பாக மத்திய உள்துறை அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவரான அண்ணாமலைக்கு பாஜகவில் உரிய மரியாதையை தரவேண்டும் என்பது பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி அண்ணாமலையால் பாஜக பக்கம் இழுக்கப்பட்ட தமிழக மக்களின் எதிர்ப்பார்க்கவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு சிலர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக இருக்கிறார், அண்ணாமலை தனி கட்சி தொடங்க இருக்கிறார் என்றெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கர்நாடகாவில் பாஜகவுக்கு எடியூரப்பா வால் ஏற்பட்ட நிலை தான் தமிழகத்தில் அண்ணாமலையால் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகாவில் , 2011 ஆம் ஆண்டில் பலம் பொருந்திய சக்தியாக உலா வந்த எடியூரப்பா, 2012 இறுதியில் வழக்குகளில் சிக்கிக் கொண்டு ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். எடியூரப்பா ராஜினாமா செய்ய பெரும் காரணமாக இருந்தது கர்நாடக பாஜகவில் நிலவிய அன்றைய உட் கட்சி பூசல் தான். இதனால் மனம் வெறுத்துப் போன எடியூரப்பா கர்நாடகா ஜனதா கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.
2013 ல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 12 சதவீத வாக்குகளை பெற்ற எடியூரப்பா,6 சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றாலும் அன்று கர்நாடகாவில் பாஜகவின் வீழ்ச்சிக்கு எடியூரப்பா பாஜகவில் இருந்து வெளியே சென்றது காரணமாக இருந்தது. பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற எடியூரப்பா ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர் பெற்ற 12 சதவீத வாக்கு பாஜகவை சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைய செய்தது.
கர்நாடகாவில் எடியூரப்பா இல்லாமல் பாஜக வெற்றி அடைய முடியாது என்பதை உணர்ந்த அப்போதைய பாஜக தலைவர் ராஜா நாத்சிங் எடியூரப்பாவை சந்தித்து அவர் கட்சியை மீண்டும் பாஜகவில் இணைக்க வைத்தார். பிறகு நடைபெற்ற 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது.
உட்கட்சி அரசியலால் பலம் பொருந்த தலைவர்கள் மனம் நொந்து வெளியேறும் போது அந்தகட்சி வீழ்ச்சியை சந்திக்கும் என்பதற்கு கர்நாடகவில் நடந்த இந்த சம்பவம் உதாரணம், அந்த வகையில் இது போன்ற ஒரு சூழலை தமிழகத்திற்கு டெல்லி பாஜக தலைமை ஏற்படுத்தா வகையில் அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்து தக்க வைத்து கொள்ளும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

