முதல்வரின் கபட நாடகம்… திமுகவை வீழ்த்த தயாரான விவசாயிகள்… விவசாயிகளுக்கு செய்த உச்சகட்ட துரோகம்…

0
Follow on Google News

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம், விவசாயிகள் மீது அக்கறை கொண்டவராக தன்னை காட்டி கொள்வதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விவசாயிகள் நலம் சார்ந்து சில கோரிக்கைகளை பிரதமருக்கு வைத்து இருந்தார். ஆனால் திமுக அரசாங்கத்தின் கீழ் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் என்ன என்கிற புள்ளி விவரம் வெளியாகி, விவசாயிகள் மீது தன்னை அக்கறை கொண்டவராக காட்டி கொள்ள முயன்ற தமிழக முதல்வரின் நாடகம் அம்பலமாகி இருக்கிறது.

திமுக அரசின் 2024 – 2025 பட்ஜெட்டில் , விவசாயிகளுக்கு சுமார் 50 ஆயிரம் இலவசம் மின்சாரம் இணைப்புங்கள் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது, ஆனால் சுமார் வெறும் 15 ஆயிரம் மின்சார இணைப்புகள் மட்டுமே வழங்கி இருக்கிறது திமுக அரசு. தங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை எழுப்பினால், அவர்களை கைது செய்து விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்கும் செயலை தான் திமுக அரசு செய்து இருக்கிறது.

திமுக அரசின் மாநில விவசாய பட்ஜெட்டில், சிறு நீர்ப்பாசன நிதி ₹408.83 கோடியிலிருந்து ₹332.80 கோடியாக சுமார் 18.5% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், ஈரோடு மற்றும் மதுரையில் உள்ள பால் விவசாயிகள் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க பல முறை திமுக அரசிடம் முறையிட்டும் எந்த ப்ரெஜனமும் இல்லை.

மேலும் திமுக ஆட்சியில் தோட்டக்கலை விவசாயிகள் கொள்முதல் விலை குறைந்ததால், தங்கள் விளைபொருட்களை சாலைகளில், குளங்களில் கொட்டும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர், மேலும் மா விவசாயிகள் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் கொள்முதல் செய்வதற்கு திமுக அரசாங்கத்திடம் போதிய சாக்கு பை, போதுமான போக்குவரத்து இல்லாமல், நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மலையில் நனைந்த நெல்களால், விவசாயிகளுக்கு மிக பெரிய இழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் கண்ணீர் மல்க கதறி அழுத காட்சிகளை மறந்து விட முடியாது.

மேலும் நெல் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு 70 செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக எழுந்துள்ள குற்றசாட்டு, விவசாயிகளிடம் இருந்தும் கூட லஞ்சமா என திமுக அரசுக்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

2025ம் வருடத்தில் பருவ மலை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த டெல்டா விவசாயிகளில் பயிர்கள் நாசம் அடைந்ததை தொடர்ந்து ஹெக்டேருக்கு ₹35,000 வழங்க வேண்டும் என திமுக அரசிடம் விவசாயிகள் வைத்தனர், ஆனால் இது குறித்து செவி சாய்க்காத திமுக அரசு, விவசாயிகள் பேரழிவுகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு தனக்கு என்ன வந்தது என விவசாயிகளை கண்களாக செய்து வருகிறது திமுக அரசு என்கிற குற்றசாட்டுகள் உண்டு.

நானும் டெல்ட்டா காரன் தான் என மேடையில் முழங்கி வரும் முதல்வர் முக ஸ்டாலின், டெல்ட்டா விவசாயிகள் படும் துயரத்தை துடைக்க என்ன செய்தார் என்கிற கேள்விக்கு இது வரை விடை இல்லை. திமுக 2021ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் பட்டியல் மிக நிலமாக நீண்டு கொண்டிருக்கிறது.

இப்படி முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளின் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் திமுக அரசு, தன்னுடைய தவறை மூடி மறைக்கும் முயற்சியாக, தன்னை விவசாயிகளின் அக்கறை கொண்டவராக காட்டி கொள்வதற்கு நடத்திய நாடகம் தான் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் நலன் தொர்பாக வைத்த கோரிக்கை கடிதம் என்கின்றனர் மக்கள்.