7 திமுக அமைச்சர்களுக்கு குறி… அமித்ஷா ஆப்பரேஷன் ஸ்டார்ட்… தேர்தலுக்குள் அரங்கேறும் சம்பவம்…

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தற்பொழுது தன்னுடைய முழு கவனத்தையும் தமிழகம் பக்கம் திருப்பி இருக்கிறது பாஜக டெல்லி தலைமை. குறிப்பாக இதுவரை பீகார் தேர்தல் காரணமாக தமிழகம் பக்கம் திரும்பாமல் இருந்தால் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், பீகார் தேர்தலை முடித்த கையோடு தமிழகத்தை குறி வைத்து வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக தான் பீகார் தேர்தல் முடிந்த சில நாட்களில் கோவை வந்த பிரதமர் மோடி, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கு வகையில் அடுத்தடுத்து தன்னுடைய வருகை இனி தமிழகத்தில் இருக்கும் என்பதை பாஜக மூத்த தலைவர்களிடம் நினைவு படுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு பக்கம் தேர்தல் களத்தில் மிக தீவிரமாக பணியாற்ற வேண்டும், அதே நேரத்தில் மறுப்பக்கம் திமுகவை தேர்தலில் தீவிரம் காட்டாதபடி முடக்க வேண்டும் என்பது தான் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பார்முலா என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் திமுகவில் முக்கிய புள்ளிகள் லிஸ்ட் அமித்ஷா கைக்கு சென்று இருக்கிறது, அதில் முதல் இடத்தில் இருப்பவர் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி என்றும் அடுத்தடுத்து அந்த பட்டியலில், அமைச்சர்கள் கே என் நேரு, ஏ வ வேலு, எம் ஆர் கே பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன், சேகர் பாபு, மா சுப்பிரமணியன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் பெயர்கள் அமித்சா கையில் இருக்கும் லிஸ்டில் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கைவசம் இருக்கும் லிஸ்டில் இருக்கும் ஒவ்வொரு வரையும், தனி தனியாக அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த ரிப்போர்ட் தொடர்ந்து அமித்ஷா கவனத்துக்கு சென்று கொண்டே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாநில தேர்தலின் போது, அமித்ஷா வுக்கு நம்பிக்கைக்குரிய தனியார் நிறுவனம் ஒன்று, அந்த மாநிலத்தில் சர்வே எடுத்து , தொடர்ந்து அமித்சாவுக்கு அப்டேட் கொடுத்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் இருந்து தனியார் நிறுவனம் மூலம் தொடர்ந்து அமித்ஷா வுக்கு அப்டேட் சென்று கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஏற்கனேவே டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை சோதனை, மணல் கொள்ளை தொடர்பான அமலாக்க துறை சோதனை, அமைச்சர் கே என் நேரு தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை என பரபரப்பாக இருந்த நிலையில் சமீப காலமாக இது தொடர்பான விவகாரம் சற்று அடக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது இந்த விவகாரங்களை தூசி தட்டி இதில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய புள்ளிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணையை எதிர்கொள்ள வைக்க முடிவு செய்துள்ளார் அமித்சா என்றும், குறிப்பாக திமுக முக்கிய புள்ளிகளை இப்படி டார்கெட் செய்து அடிக்க ஆரம்பித்தால் அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள தான் ஓடுவார்களே தவிர அவர்களால் முழுமையாக தேர்தலில் பணியாற்ற முடியாது என்பது தான் இந்த ஆப்பரேஷன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

மேலும் இப்படி திமுக முக்கிய புள்ளிகளை டார்கெட் செய்வதால், அவர்களால் சொந்த தொகுதிக்குள் முடக்கி விடலாம்,மற்ற தொகுதியில் NDA கூட்டணி இறங்கி தீவிரமாக வேலை செய்தால், திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற திட்டத்தில் தான் அமித்ஷா இந்த ஆப்பரேஷனை தொடங்கி இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகள், குறிப்பாக தேர்தல் வேளைகளில் தீவிரம்காட்டும் தலைகளை குறிவைத்து டெல்லி பாஜக தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியுள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.