விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகி உள்ள நிலையில் , அந்த கட்சியில் விஜய்யை தவிர்த்து மற்றபடி சொல்லும்படியாக யாரையும் அரசியல் வாதியாக ஏற்று கொள்ள முடியாது, என்று சொல்லும் வகையிலே அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரும் அரசியல் அனுபவம் இல்லாத கத்து குட்டியாகவே உள்ளனர், அந்த வகையில் விஜய் இருக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை எப்படி இந்த கத்து குட்டிகளை வைத்துக்கொண்டு ஓட்டாக மாற்ற போகிறார் விஜய் என்கிற மிக பெரிய கேள்வி எழுந்து வந்தது.
தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளராக இருக்க கூடிய புஸ்ஸி ஆனந்த் முழுக்க முழுக்க ட்ரோல் மெட்டெறியலாக மாறியுள்ளார், அடுத்த படியாக இருக்கும் ஆதவா அர்ஜுனா, ஜான் ஆரோக்கிய சாமி, நிர்மல் குமார் போன்றோர் எல்லாம் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்றால் , அப்படியானால் விஜய் கட்சியின் நிலைமையை என்னத்த சொல்ல என கிண்டலாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

அந்த வகையில் எம் ஜி ஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வராக வந்தார் என்றால், அவர் கட்சி தொடங்கியதும், அவருடன் திமுகவில் இருந்த அரசியல் அனுபவம் கொண்ட பல முக்கிய தலைவர்கள் பக்க பலமாக இருந்தார்கள், அதே போன்று விஜயகாந்த் கட்சி தொடங்கியதும் எம் ஜி ஆர் அமைச்சரவையில் இருந்த பன்ரொட்டி இராமச்சந்திரன் உடன் இருந்தார், ஆனால் தற்பொழுது விஜய் உடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று சொல்ல கூடியவர்கள், கரூர் விவகாரத்தில் எப்படி வெளியில் தலையே காட்டாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள் என்பது அறிந்த ஒன்று.
மேலும் கரூர் விவகாரத்திற்கு பின்பே, தன்னுடன் இருக்கும் ஆதவா அர்ஜுனா தவிர்த்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஜான் ஆரோக்கிய சாமி இதெல்லாம் டம்மி பீஸ் என்றும், இவர்களை வைத்து கொண்டு அரசியலில் பயணித்தால் , நம் கரை சேரமாட்டோம் என்பதை உணர்ந்த அரசியல் நன்கு அனுபவம் கொண்ட நபர்களை , முதிர்ந்த அரசியல் தலைவர்களை தேட தொடங்கியவர், அதற்காக அதிமுகவின் முக்கிய தலைவர்களாக இருந்து எடப்பாடி பழனிசாமியால் ஓரம் கட்டப்பட்ட தலைவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தார் விஜய்.
அதில் மருது அழகுராஜ்யிடம் விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வந்தாலும் கூட, விஜய்யை ஏற்று கொள்ள மருது அழகு ராஜ் தயாராக இருந்தாலும், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஜான் ஆரோக்கிய சாமி போன்ற கத்து குட்டிகளுக்கு கீழ் நாம் அரசியல் செய்ய வேண்டுமா என்கிற தயக்கத்தில் திமுகவில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இதே போன்று மனோஜ் பாண்டியன் , ஓபிஎஸ், செங்கோட்டையன் என பெரும் அரசியல் ஜாம்பவான் கூட விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வந்த நிலையில் யாரும் விஜய்க்கு பிடி கொடுக்க வில்லை, குறிப்பாக திமுகவில் இணைவதில் காட்டிய ஆர்வம் விஜய் கட்சியில் இணைவதில் யாரும் ஆர்வம் காட்ட வில்லை, இதனை தொடர்ந்து கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த பழுத்த அரசியல்வாதியும் த வெ க பக்கம் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம், பொதுசெயலாளர் என்கிற உயரிய பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் என்கிற டம்மி பீஸ் தான் என்பதை உணர்ந்த விஜய்.
தற்பொழுது செங்கோட்டையன் த வெ க வில் இணைந்தால் அவருக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்க தயார், இது போன்ற ஒரு பழுத்த அரசியல் வாதி இருந்தால் மட்டுமே மற்ற மூத்த அரசியல்வாதிகள் த வெ க வில் இணைவார்கள் என முடிவு எடுத்த விஜய், புஸ்ஸி ஆனந்தை ஓரம் கட்டிவிட்டு த வெ க வில் இணையும் செங்கோட்டையனுக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இ

