சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பெரும்பாலான மாநகராட்சியை கைப்பற்றியது. இந்த மாநகராட்சி தேர்தலில் தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் ராஜ்தாக்கரே பேசிய பேச்சுக்கு தரமான பதிலடியை கொடுத்து, ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையும் வகையில் பாஜக செய்துள்ள சம்பவம் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைத்துள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் அங்கே தாராவி போன்ற பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது, குறிப்பாக ஒட்டுமொத்த மும்பை வாழ் தமிழர்களையும் பாஜக பக்கம் திசை திருப்பியது. இது சிவசேனா போன்ற எதிர்கட்சிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை, குறிப்பாக ராஜதாக்கரே போன்ற மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் நேரடியாக தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய பேச்சு மிக பெரிய அளவில் விவாத பொருளாக மாறியது.

குறிப்பாக பால்தாக்கரே தமிழர்களை இதற்கு தான் அடித்து விரட்டினார் என்றெல்லாம் ராஜதேக்ரே பேசி திமிர் பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு படுத்தும் வகையில், அமைத்தது, இருந்தும் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய சிவசேனா கட்சி தலைவர்களுக்கு தங்கள் பதிலடியை கொடுத்து, தமிழர்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதி படுத்தினார்கள்.
இவ்வளவு பெரிய அமளி துமளிக்கு மத்தியில், தமிழர்களையும், தமிழ் மொழியையும் வைத்து அரசியல் செய்து வரும் திமுக ஒரு சிறிய கணடனத்தை கூட தமிழர்களுக்கு எதிராக பேசிய ராஜ்தாக்கரேவுக்கு தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு சூழலில் தமிழர்களை இழிவு படுத்திய ராஜ்தாக்ரேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சைலெண்டாக சம்பவம் செய்துள்ளது மகாராஷ்டிரா பாஜக.
நடந்து முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் வெற்றி விழா கொண்டாட பட்டது, அப்போது மகாராஷ்டிர பாஜக மாநிலத் தலைவர் ரவீந்திர சவான் தமிழர்களின் பராமப்ரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்திருந்தது, இந்த தமிழர்களை ராஜ் தாக்கரே இழிவு படுத்தினரோ அதே தமிழர்களின் உடையை அணிந்து அவர்களின் பாரம்பரியம் என்ன என்பதை தெரிந்து கொள் என ராஜ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்து இருந்தது ரவீந்திர சவான் தமிழர்களின் பராமப்ரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்திருந்தது
குறிப்பாக இதற்கு முன்பு ராஜ்தாக்கரே தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டியையும் கேலி செய்து இருந்த நிலையில் ரவீந்திர சவான் வேஷ்டி அணிந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது, ராஜ்தாக்ரேவுக்கு முக்குடைப்பு சம்பவமாக பார்க்க பட்டது.குறிப்பாக மராட்டிய மண்ணிலே தமிழர்களை இழிவு படுத்திய ராஜதாக்கரேவுக்கு பாஜக கொடுத்த பதிலடி தமிழர்களை பெருமை அடைய செய்யும் வகையில் அமைந்து இருந்தது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பண்பாடு , பாரம்பரியம், பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. டெல்லியில் பிரதமர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது, திருவள்ளுவர் சிலையை ஹரித்வாரில் நிறுவி, திருக்குறளை உலகிற்கு எடுத்துச் சென்றது என தொடர்ந்து குறிப்பாக தமிழர்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாஜக போற்றி மதித்து வருவது குறிப்பிடதக்கது.

