திரைப்பட நடிகர்கள் நடிகைகள் திடீரென திருமண வாழ்வில் இருந்து தங்களது துணையை விட்டு பிரிவதும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வேறொருவரை கரம் பற்றுவதும் மிகவும் சாதாரணமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் இப்படி பிரிந்து போய் புதிய வாழ்க்கை துணையை தேடிக்கொண்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. அன்று ஜெமினி கணேசன் துவங்கி இன்றைய நடிகர் ரவிமோகன் வரை திருமண முறிவுகளும் புதிய துணை தேடுதலும் அது தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வரிசையில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷ், 2வது திருமணத்துக்கு தயாராகி விட்டார் என்ற தகவல் வேகமாக காட்டுத் தீ போல பரவி வருகிறது. வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று நடிகர் தனுஷ் நடிகை மிருணாள் தாகூர் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் தனது முதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக கடந்த 2022ம் ஆண்டு அறிவித்தார். 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனம் ஒத்து பிரிவதாக கூறி சட்டரீதியாக விவாகரத்து பெற்றனர். இவர்களின் 2 மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அப்பா தனுஷூடன் சில காலமும் அம்மா ஐஸ்வர்யாவுடன் சில காலம் என இரண்டு பேரிடமும் இருந்து வருகிறார்கள். விவாகரத்து பெற்று 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாக பல மாதங்களாக தகவல் தொடர்ந்து வருகின்றன.
மிருணாள் தாகூர் நடித்த இந்தி படத்தின் பிரமோசனுக்கு நடிகர் தனுஷ் நேரில் செல்வது, சமூக வலைதள பதிவுகளில் இருவரும் மனம் விட்டு உரையாடிக் கொள்வது என தனுஷ் மிருணாள் இருவரது செயல்களும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தன. தற்போது இருவரும் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வேகமாக பரவி வருகிறது.
தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவருக்கும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த வதந்திகளுக்கு இடையே தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் உண்மையா அல்லது ஏஐ தொழில் நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்டதா என்பதும் உறுதி செய்யவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. தனுஷ் மிருணாள் தாகூர் இருவர் தரப்பிலும் இந்த திருமண தகவல் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் தனுஷ் ரசிகர்கள் மிருணாள் தாகூரை தங்களது அண்ணியாக ஏற்றுக்கொண்டு தனுஷின் மனைவியாகவே பாவிக்க தொடங்கி விட்டார்கள்.
அண்மையில் நடிகை சமந்தா வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடி மூரை திடீரென 2ம் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி கோவை ஈஷா மையத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடந்தது. அதேபோல் தனுஷின் 2வது திருமணம் குறித்த பேச்சும் சமூக வலைதளத்தில் இப்போது பெரிய அளவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் முக்கியமான பேசுபொருளாகவும் மாறிவிட்டது.
நடிகர் தனுஷை பொருத்த வரை 40 வயது கடந்த நிலையிலும் இன்னும் வாலிபர் போன்ற இளமையான தோற்றத்தில் காட்சி தருகிறார். மிருணாள் தாகூரும் பார்த்தவுடன் ஆளை அசத்தும் ஒரு அழகிய நடிகையாக இருக்கிறார். இவர்களின் ஜோடிப்பொருத்தம் மிக சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த திருமண விழாவில் நடிகர் தனுஷின் பிள்ளைகள் யாத்ரா லிங்கா இருவரும் பங்கேற்பார்களா, வளர்ந்த பிள்ளைகள் முன்னிலையில் நடிகர் தனுஷ் தனது காதல் நடிகை கழுத்தில் தாலி கட்டுவாரா என்றும் ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறது.

