திமுக – விசிக இடையே வெடித்த மோதல்… காங்கிரசை தொடர்ந்து கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக… பரிதாபத்தில் திமுக நிலை…

0
Follow on Google News

தொடர்ந்து திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தற்பொழுது விடுதலை சிறுத்தை கட்சியும் கொடுக்க தொடங்கி இருக்கிறது, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு முன்பே விசிக தான் திமுகவுக்கு இதற்கு முன்பு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்தை முதல் முதலில் எழுப்பி, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது.

தொல் திருமாவளவன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்தை பதிவு செய்ய, அடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை பதிவை நீக்கி விட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதில் இருந்து பின்வாங்கினார் திருமாவளவன், குறிப்பாக தொல் திருமாவளவன் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்தை வைத்த பின்பே, எங்களுடன் கூட்டணிக்கு வருவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என வெளிப்படையாக தெரிவித்து அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் தற்பொழுது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் விஜய் உடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு, ஆட்சியில் பங்கு தரவேண்டும், athika தொகுதி கொடுக்க வேண்டும் என திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், திமுக தரப்பில் இருந்து குறிப்பாக முதல்வர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலடியும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்பதே உண்மை.

கடந்த தேர்தலில் திமுகவை விட்டால் காங்கிரஸ் – விசிக போன்ற கட்சிகளுக்கு வேறு வழியில்லை, ஆனால் தற்பொழுது விஜய் அரசியல் வருகை காங்கிரஸ் – விசிக போன்ற கட்சிகளுக்கு மற்றொரு வாய்ப்பாக அமைத்துள்ளது. இது தான் நேரம் என திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது விசிக வும் திமுகவுக்கு எதிரான ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திமுக எம்பி ஆர் ராசாவிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதில், பிரதமர் மணிப்பூருக்கு ஏன் போகவில்லை என்று கேட்கிறீர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வேங்கைவயலுக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை என்று ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் பேசிய ஆ.ராசா, திருமாவளவனாக இருக்கட்டும், வேறு எந்த சாதித் தலைவர்களாக இருக்கட்டும், அரசியல் தலைவர்களாக இருக்கட்டும்,

நான் அவரை பெரிய அரசியல் தலைவராக பார்க்கிறேன்.நான் இன்னும் அவரை விட சாதிக்காக போராடின தலைவரை விட்டுவிடுங்கள். யாராவது சொல்லச் சொல்லுங்கள். பெயரை வெளியிடுங்கள், நம்மால் பெயரை வெளியிட இயலவில்லை. அரசாங்கத்தால் மட்டுமல்ல, அங்கே இருக்கும் யாராலும் ஒரு பெயரைச் சொல்ல முடியவில்லை. ஒரு பெயரை சொல்லாமல் விசாரணையை எப்படி தொடங்க முடியும்? என ஆ ராசா பேசி இருந்தார்.

இதற்கு ஆ.ராசா, வி.சி.க தலைவர் திருமாவளவனை சாதித் தலைவர் என்று அவதூறு பேசியதாக வி.சி.க-வினர் கொந்தளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் விசிகவினர் பலரும் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக பதிவுகளை எழுதி வருகின்றனர். இதையெல்லாவற்றையும் விட திருமாவளவனை அவதூறு பேசியதாக, ஆ.ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரில் வி.சி.க-வினர் ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதற்கு முன்பு தயாநிதி மாறன், ஆர் பாரதி போன்ற திமுகவினர் தலித் சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசிய போதெல்லாம் பொங்காத விசிகவினர் தற்பொழுது ஆ ராசா பேசிய பேச்சுக்கு பொங்குவதின் பின்னணியில் காங்கிரஸ் போன்றே திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் இருந்து வெளியேற தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.