திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு தவறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்து வரும் நிலையில், மற்றொரு நீதிபதிகளிடம் இந்த வழக்கின் மேல்முறையிட்டு விசாரணையின் போது, தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான விகாஷ் சிங், “நீதிபதி என்ன செய்கிறார் என்றே புரியவில்லை. அவர் விரைவில் அரசியலுக்கு வந்து தேர்தலில் கூட போட்டியிடலாம்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் தமிழக அரசு சார்பில் காணொளிக் காட்சி வழியாக மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். அவர் வாதிட ஆரம்பித்தபோது இடைமறித்த நீதிபதி சுவாமிநாதன், முந்தைய நாள் நீதிமன்ற விசாரணையில் தன்னை பற்றி வைத்த வாதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு தனக்குத் தெரியவில்லை என்றார் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் . தான் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாக விகாஸ் சிங் முன்வைத்த வாதங்களைப் பற்றியே கேட்பதாகவும், இதை நான் செய்தித்தாள்களில் படித்தேன்என்றும், இப்போதும் அதை மீண்டும் சொல்லுங்களேன்” என நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.
இருப்பினும், அது தொடர்பாக எந்தவொரு கருத்தும் கூற விரும்பவில்லை என்று விகாஸ் சிங் பதிலளித்தார். இருப்பினும் நீதிபதி, “நேற்று இரு நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை இப்போதே எனக்கு முன்னால் சொல்லுங்களேன்?” என்று மீண்டும் மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் கேட்க தமிழக அரசு வழங்கறிஞர் விகாஸ் சிங் அந்தக் கருத்துக்களை மீண்டும் கூற மறுத்து, “இல்லை. நான் விரும்பவில்லை” என்று மட்டும் பதிலளித்தார்
நீதிமன்றத்தில் ஒரு பக்கம் விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருக்கையில் மறுப்பக்கம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா முகப்பு புகைப்படத்தில் 1805 என பொறிக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறதஹு. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா முகப்பில் உள்ள கல்வெட்டில் 1805 என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
தீபத்தூண் தர்காவுக்கு சொந்தம் என உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில், முகப்பு கல்வெட்டில் 1805 என்றுள்ள புகைப்பட ஆதாரம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மத்திய தொல்லியல் துறை தரப்பில் இருந்து இது குறித்து சில தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதில் சிக்கந்தர் பாதுஷா தர்கா முகப்பு கல்வெட்டில் 1805 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ள தன்மூலம் தர்காவின் முகப்பு கட்டிடமே 1805-ல் தான் உருவானதாக கருத வாய்ப்புள்ளது.
ஆனால், மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூண் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமணர்கால தூண் என்று தெரிவிக்கப்படும் நிலையில், தூண் தங்களுக்கு சொந்தமானது என தர்கா நிர்வாகம் எப்படி கூறுகிறது என்ற கேள்வி எழுகிறது. அந்த புகைப்படம் உண்மைதானா எனவும், அதில் உள்ள தகவல்கள் உண்மையா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என மத்திய தொல்லியல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கார்த்திகை தீப விவகாரம் ஒருபக்கம் நீதிமன்றத்தில் அனல் பறந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் மத்திய தொல்லியல் துறையும் இது குறித்த ஆய்வுகளில் இறங்கி இருப்பது, அடுத்தடுத்த நாட்களில் இன்னும் இந்த விவகாரம் மிக பெரிய அளவில் பேசும்பொருளாக மாறும் என எதிர்பார்க்க படுகிறது.

