தேசிய பொதுச் செயலாளராகும் அண்ணாமலை… அடுத்த 20 வருடத்துக்கான வியூகம்… உறுதி செய்த மோடி – அமித்ஷா…

0
Follow on Google News

பாஜக தேசிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பான நீண்ட இழுபறிக்கு பின்பு நிதின் நவின் என்கின்ற ஒரு நடுத்தர வயதுமிக்க இளைஞரை பாஜக தேசிய செயல் தலைவராக நியமித்துள்ளது பாஜக தலைமை. அதேபோன்று உத்தரப்பிரதேச பாஜக மாநில தலைவராக பவ்காஜ் சவாரி என்கின்ற இளம் வயது ஒருவரை மாநில தலைவராக நியமித்துள்ளது பாஜக தலைமை இவை அனைத்துமே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் முடிவு தான் என்கிறது டெல்லி பாஜக.

அதாவது அடுத்தடுத்து துடிப்பான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அடுத்த 20 வருஷத்துக்கு இந்தியாவில் பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக நிலை நிறுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் தான் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் இந்த முடிவை எடுத்து இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு முன்பு பாஜக தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் போன்ற மூத்த தலைவர்கள் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. இப்படி மூத்த தலைவர்கள் தேசிய தலைவராக நியமிக்க பட்டால் அவர்களுக்கு தகுந்தார் போல் சீனியாரிட்டிகளுக்கு தேசிய நிர்வாகத்தில் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் பாஜக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சீனியாரிட்டி படி பொறுப்பு வழங்கப்படுமேயானால் அவருக்கு நிச்சயம் முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று இதற்கு முன்பு ஆருடங்கள் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது இளம் தலைவராக நிதின் நவீன் என்பவரை பாஜக தேசிய செயல் தலைவராக நியமித்திருக்கிறது பாஜக .

குறிப்பாக தேசிய செயல் தலைவரே தேசிய தலைவராக நியமிக்கப்படுவார்கள் என்பது கடந்த கால பாஜகவின் வரலாறு கூட, அந்த வகையிலேயே இளம் வயதுடைய நிதின் நவின் பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவருடைய நம்பிக்கை கூரியர்வராக திகழும் அண்ணாமலை, மோடி அமித்ஷா என்ன நினைக்கிறார்களோ அதை கடந்த காலங்களில் தமிழகத்தில் நடத்திக் காட்டியவரும் கூட, அந்த வகையில் பாஜக தேசிய பொதுச்செயலாளராக அண்ணாமலை உறுதியாக பொறுப்பேற்பார் என நூறு சதவீதம் உறுதிப்படுத்துகிறது செய்திகள்.

இந்த நிலையில் இன்னும் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் நெற்களஞ்சியமான தஞ்சை இல் பிரதமர் மோடி கொண்டாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாஜக தமிழக பொறுப்பாளர் வைத்திய பண்டாவை மாற்றிவிட்டு திடீரென்று பி ஸ் கோயல் உட்பட மூன்று மத்திய அமைச்சர்களை பாஜக டெல்லி தலைமை நியமித்ததின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிஸ் கோயிலுக்கும் நல்ல நட்பு உள்ளது என்றும்.

அந்த வகையில் தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுக்கு தேவையான கூடுதல் தொகுதிகளை பியூஸ் கோயல் பெற்று தருவதற்கு ஏதுவாக தான் இவர்களை பாஜக தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார் என்றும் மேலும் மூத்த முக்கிய அமைச்சர்கள் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைக்காக பாமக மற்றும் தேமுதிக ஆகியோரை அணுகும் பொழுது கூட்டணியும் எளிதாக உறுதி செய்து விடலாம் என்கின்ற திட்டத்துடன் பாஜக டெல்லி தலைமை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.