பாஜகவுக்கு 40 தொகுதிகள்…எடப்பாடியிடம் அமித்ஷா நேரடி பேச்சு… வெளியான உறுதி செய்யப்பட்ட தொகுதிகள்…

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வரும் 2026 மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதம் வாக்கு பதிவு, மே மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

விஜய் தொடங்கியுள்ள தவெக உடன் கூட்டணிக்கு இதுவரை யாரும் செல்லவில்லை, கடைசி வரை தனியாகத்தான் கூட்டணியில் இல்லாமல் விஜய் போட்டியிடும் சூழல் உருவாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்நிலையில் திமுக எதிராக தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வேளையில் மிக தீவிரம் காட்டி வருகிறது டெல்லி பாஜக தலைமை.

இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே அமிட்ஷா தரப்பில் இருந்து பேசப்பட்டு இருக்கிறது. அதில் அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடும், மீதம் 54 தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என எடப்பாடி தெரிவித்து இருக்கிறார், ஆனால் அதற்கு அமித்ஷா தரப்பு, 150 தொகுதியில் அதிமுக போட்டியிடட்டும்,மீதம் 84 தொகுதியில் கூட்டணி காட்சிகள் போட்டியிடட்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

அதாவது பாஜக 40 தொகுதியில், பாமக 15 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள், TTV தினகரன் 8 தொகுதிகள், மீதம் உள்ள தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், இப்படி தொகுதி ஒதுக்கினால் மட்டுமே , மற்ற கூட்டணி காட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முடியும் என எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா தரப்பு வலியுறுத்தி இருக்கிறது.

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு 40 தொகுதி கொடுக்க முன் வரவில்லை, தொகுதிகளை குறைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அப்போது பாஜகவுக்கு 30 தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க, அதற்கு அமித்ஷா தரப்பு, அப்படியானால் 30 தொகுதிகளில் 25 தொகுதிகள் நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்க வேண்டும், மீதம் உள்ள 5 நீங்கள் கொடுக்கும் தொகுதியை பெற்று கொள்கிறோம் என அமித்ஷா தரப்பு தெரிவித்து இருக்கிறது.

மேலும் பாஜகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கினால் பாதிக்கு பாதி என்கிற விதத்தில், 20 தொகுதிகள் பாஜக கேட்கும் தொகுதிகளை கொடுக்க வேண்டும், மீதம் 20 தொகுதிகள் நீங்கள் கொடுக்கும் தொகுதியில் பாஜக போட்டியிடும் என அமித்ஷா தரப்பிபு எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில் இறுதியாக அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் பாஜக 30 தொகுதிகளிலும், மீதம் உள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பாஜக போட்டியிட இருக்கும் 30 தொகுதிகளில், 25 தொகுதிகள் பாஜக கேட்கும் தொகுதிகளை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்கிற அமித்ஷாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலும் அமித்ஷா கைக்கு சென்று இருக்கிறது.

அதில் கொங்கு மண்டலம் மற்றும் தென் ,மாவட்டத்தில் அதிக தொகுதிகள் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்ததந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் 90 சதவிகிதம் தயாராகிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.