திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் குறித்த விசாரணையில் , இதற்கும் முன்பு நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியும் சரமாரியாக அமைந்து இருந்தது, தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனு ஸ்மிருதி வரையறுத்துள்ளது” எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,
அதாவது தனது குடிமக்களின் மகிழ்ச்சியிலேயே மன்னனின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்றும், அவர்களின் நலனிலேயே மன்னனின் நலன் உள்ளது என்றும். தனது குடிமக்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதையே மன்னன் நல்லதாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ள நீதிபதி, மேலும், ஒரு மன்னனின் மிக உயர்ந்த கடமை தனது குடிமக்களைப் பாதுகாப்பதே என்று மனு ஸ்மிருதி யை சுட்டி காட்டி.

நிர்ணயிக்கப்பட்ட வரிகளை தனது குடிமக்களிடமிருந்து பெற்று அவர்களைப் பாதுகாக்கும் மன்னன் மட்டுமே தர்மத்தின்படி செயல்படுகிறான். நாம் ‘மன்னன்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘அரசாங்கம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மனு ஸ்மிருதி குறித்து பேசினார்.
மேலும் இந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். இதேபோல், தமிழக அரசின் தலைமை செயலர் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதிகாரிகள் அனைவரும் முன்னிலையிலிருந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி எனது உத்தரவுக்கு எதிராக மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன் என்பதை கட்டாயமாக கூறியே ஆக வேண்டும் மேலும், “நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காமல் விட்டால், சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தே அர்த்தமற்றதாகி விடும்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த விவகாரம் மிக முக்கியமானது என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்களது நிலைப்பாட்டை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்றபோது தலைமை செயலர் கூறுகையில், “எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் பிறப்பித்தோம். தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதில் எந்த கருத்தும் இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது என்ன விதமான செயல்” என்று கேள்வி எழுப்பினார்.
நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்பதற்கும் பதில் அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுவது என்னவிதமான செயல்?.. என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்.

