100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை, புது வடிவில் MGNREGA என மாற்றம் செய்து 125 நாட்களாக அதிகரித்து, இந்தியா முழுவதும் 100 திட்டத்தில் பயனடைந்து வரும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு. ஆனால் பாஜக அரசு 100 நாள் திட்டத்தை நிறுத்தி விட்டது என எதிர்கட்சிகள் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்து 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், 100 நாள் திட்டத்தில் ஊழல் மலிந்து கிடந்ததை சாமானியனுக்கு அறிவார்கள். 100 நாள் திட்டத்தில் பயோமேட்ரிக் வசதி இல்லாத காலத்தில் சம்பத்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் பலர் போலியான பயனாளிகள் பெயரை இணைத்து பல கோடி முறையீடு செய்து வந்தனர், குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் 2013ம் ஆண்டு CAG அறிக்கையில் பல கோடி ரூபாய் 100 நாள் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது என்பதை தெரிவித்து இருந்தது.

இப்படி காங்கிரஸ் ஆட்சியில் நடந்த கொள்ளையால், 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கிய பணம், அதிகாரிகள் கைக்கும், இடை தரகர்கள் கைக்கு சென்றது, பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு நேரடியாக முழு பணமும் பயணனாளிகளின் கைக்கு செல்லும் வகையில் வழி வகை செய்தார் பிரதமர்,மேலும் கடந்த 2022 – 23 ஆண்டுகளில் மட்டுமே சுமார் 7.43 லட்சம் போலி அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ₹42,534 கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தை பாஜக அரசி மூடி விட்டது என பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு 100 நாள் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி, கூடுதலாக எங்களுக்கு 25 சதவிகித வருமானத்தை பெருக்கி கொடுத்துள்ளது என தெரிவிக்கு மக்கள் எதிர்க்கட்சி பொய்யான பிரட்சரத்தை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை என மக்களே எதிர்க்கட்சிகளின் பொய்யான பிரச்சாரத்தை புறம்தள்ளி வருவதை பார்க்க முடிகிறது.
மேலும் தற்பொழுது MGNREGA என மாற்றம் செய்து விரிவு படுத்தியுள்ள மோடி அரசு, இதற்கு முன்பு போல் 15 நாள் ஊதிய காத்திருப்பு காலத்திற்கு பதிலாக, வாரந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திட்டத்தில் டிஜிட்டல் முறை வருகை பதிவு கட்டமாக்கப்படுகிறது. எனவே, ஊதிய பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கப்பட்டு ஊழல் தடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தால் வேளாண்மைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதை போக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் பருவகால சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடைபெறதாக குறிப்பிட்ட காலங்களை மாநில அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க முடியும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீர் பாதுகாப்பு, ஊரக கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் பணிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், அந்த காலகட்டத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தில், பல நிலைகளில் பயோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு, GPS அல்லது மொபைல் அடிப்படையிலான பணித் தள கண்காணிப்பு, ரியல்-டைம் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) டாஷ்போர்டுகள், முன்தின அறிவிப்புகள் (Proactive Public Disclosures), திட்டமிடல், தணிக்கை மற்றும் முறைகேடு அபாயங்களை குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு போன்ற அம்சங்கள் மூலம் நிர்வாகம், பொறுப்புத்தன்மை மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவை நவீனப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

