தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு, நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை வந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்க 6 வார காலத்திற்குள் இடங்கள் கண்டறிய திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உதார்விட்டுள்ள நிலையில், தொடர்ந்து நவோதய பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக அரசு சம்மட்டி அடியாக இந்த உத்தரவு அமைத்துள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
காசு உள்ளவர்கள் மட்டுமே CBSE பள்ளியில் தமிழக மாணவர்கள் படிக்க முடியும் என்கிற தற்போதைய சூழலில், பாமரனும் தன்னுடைய குழந்தையை CBSE பாட திட்டத்தில் நவோதய பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கலாம் என்பது தான் மத்திய அரசின் நவோதய பள்ளி. இப்படி ஏழை எளிய மக்களுக்கு தங்கள் குழந்தைகளை CBSE பாட திட்டத்தில் படிக்க வைக்கும் வகையில் செயல்பட கூடிய நவோதய பள்ளியை திமுக அரசு எதிர்ப்பதில் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி முழுக்க முழுக்க CBSE-பாட திட்டத்தை இலவசமாக கற்று கொடுக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி. லட்சக்கணக்கில் கட்டணம் கட்டி CBSE பள்ளியில் சேர்க்க வேண்டிய தமிழக்தில், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஏழை , எளிய , கிராமப்புறங்களில் உள்ள பாமரன் குழந்தையைக்கும், இலவசமாக இங்கே படிக்கலாம், அதுமட்டுமின்றி, இலவச விடுதி,
இலவச புத்தகம், இலவச சீருடை , இலவசமாக உணவு என பணம் இல்லாமலே தங்கள் குழந்தைகளை CBSE படத்திட்டத்தில் நவோதய பள்ளியில் படிக்க வைக்கலாம். இந்தியா முழுவதும் சுமார் 650க்கு மேற்பட்ட நவோதய பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் இதில் கசப்பான உண்மை என்றால் தமிழகத்தில் வெறும் ஒரே ஒரு நவோதய பள்ளி மட்டுமே செயல்படுகிறது. அந்த வகையில் காசு உள்ளவர்கள் மட்டுமே படிக்கும் CBSE பாடத்திட்டத்தை இந்த ஒரு சுழலிலிலும் ஏழை எளிய மாணவர்கள் படித்து முன்னேறி விடக்கூடாது என்பதால் நவோதயா பள்ளியை திமுக அரசு எதிர்க்கிறது என்கிற வேதனையை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
மும்மொழி கொள்கை என்கிற காரணத்தை சொல்லி உலகம் தரம் வாய்ந்த நவோதய பள்ளியை எதிர்க்கும் திமுக அரசு, அவர்களின் கட்சியை சேர்ந்த தலைவர்கள் நடந்தும் பள்ளியில் பணத்தை பெற்று கொண்டு மும்மொழி கல்வியை கற்று கொடுப்பது என்பது, எங்கே நவோதய பள்ளி தமிழகத்திற்கு வந்தால், இவர்கள் நடந்தும் பள்ளிகளின் வருமானம் பாதிக்குமோ என்கிற அச்சம் தான் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
நவோதய பள்ளியை எதிர்க்கும் திமுக அரசின் இன்றைய தமிழக அரசு பள்ளியின் நிலை பரிதாபத்தில் உள்ளது. அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் சில மாதங்களிலே இடிந்து விழும் நிலை, மலை பெய்ந்தால் வகுப்பறை மேற்க்கூரைகள் ஒழுகும் அவலம், உடைந்த நாற்காலி மேசையில் மாணவர்கள் படிக்கும் நிலை, பள்ளியில் சுகாதாரமற்ற தண்ணீர், உணவு, இதில் உச்சகட்டமாக பள்ளி நேரத்தில் மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்துவிட்டு, உள்ளே உங்களுடன் ஸ்டாலின் நிகழ்வு என திமுக அரசின் கல்வித்துறையின் அவலநிலையை அடுக்கி கொண்டே செல்லலாம்.
இதில் உச்சக்ட்டமாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு என தப்பாட்டம் அடிக்கும் திமுக ஆட்சியில் ASER அறிக்கையின்படி, 8ஆம் வகுப்பு மாணவர்களில் 62.2 சதவீதம் பேர் மட்டுமே 2ஆம் வகுப்பு அளவிலான பாடத்தை வாசிக்க முடிகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இது போன்ற அவலத்தை போக்கும் வகையில் அமைத்துள்ளது நவோதய பள்ளிகள் தமிழகத்தில் மாவட்டம் தோறும் வர இருப்பது.

