வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் நாட்களில் தமிழக அரசியலில் பல ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக அரங்கேறி, தமிழக அரசியலில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கிறது. அந்த வகையில் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணியில் பல மாற்றங்கள் நிகழ இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் தான்.
குறிப்பாக கரூர் சம்பவத்துக்கு பின்பு நடிகர் விஜய் NDA கூட்டணியில் இடம் பெற இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது, குறிப்பாக தொடர்ந்து விஜய் உடன் பாஜக தரப்பில் இருந்து பவன் கல்யாண் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார், அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பிலும் ராகுல் காந்தி இரண்டு முறை விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து கூட்டணி குறித்து பேசி வந்த தகவல் வெளியானது.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கும் நிலையில், சமீபத்தில் நடந்து தமிழக வெற்றி கழக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அந்த கட்சியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், அதிமுக – பாஜக உடன் விஜய் கூட்டணிக்கு தயாராக இல்லை என்பதை உறுதி படுத்தியது.
மேலும் பாஜக தரப்பில் இருந்து விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும், மறுபக்கம் ராகுல் காந்தி உடன் விஜய் பேசி வந்ததால், காங்கிரஸ் தான் தன்னுடைய முதல் சாய்ஸ் என்றும், காரணம் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தால், விஜய் முதல்வர் வேட்பாளராகவும், விஜய் தலைமையில் கூட்டணி இயங்கும், ஆனால் NDA கூட்டணியில் நிலை வேறு இதனாலே விஜய் காங்கிரஸ் உடனான கூட்டணியை விரும்பியதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சி தமிழ்கத்தில் தங்களை வளர்த்து கொள்வதற்கு விஜய் உடனான கூட்டணி தான் சரி என முடிவு செய்துள்ளது, ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி நெருங்கிய நண்பராக இருந்தாலும் கூட மறுபக்கம் விஜய் உடனும் நெருங்கிய நட்பில் பல வருடமாக ராகுல் காந்தி இருந்து வருகிறார். குறிப்பாக விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் விஜய்யை இணைத்து தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை ராகுல் காந்தி மூலம் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் கொடுத்த தொகுதியை பெற்று கொண்டு போட்டியிட காங்கிரஸ் தயாராக யில்லை, விஜய் உடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தவெக – காங்கிரஸ் உடனானன் கூட்டணி பேச்சுவார்த்தை தற்பொழுது வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஸ் ஜேடன்கண் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவா அர்ஜுனா ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார், மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, விஜய் உடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கிரீஸ் ஜேடன்கண் பேசி இருக்கிறார். இறுதியில் காங்கிரஸ் உடனான கூட்டணியை தமிழக வெற்றி கழகம் உறுதி செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்தடுத்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.த வெ க – காங்கிரஸ் கூட்டணி உறுதியான தகவல் திமுகவுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

