அண்ணாமலை மீது அவதூறு… நேரடியாக பதிலடி கொடுத்த மோடி… முக்குடைபட்ட அண்ணாமலை எதிர்ப்பாளர்கள்…

0
Follow on Google News

பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிந்த நிலையில் , புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தேசிய அளவில் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு என்கிற அறிவிப்பு வெளியாவதில் தொடர்ந்து தாமதமாகி கொண்டே இருந்து வருகிறது.

மேலும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வரும்போதெல்லாம், அண்ணாமலைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், அண்ணாமலைக்கு டெல்லி மேலிடத்திற்கு இடையில் இருக்கும் நெருக்கம் வெளிப்பட்டது, குறிப்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர், அண்ணாமலையை தங்கள் காரில் அமர வைத்து, ஒரே காரில் செல்வதெல்லாம், இந்தியாவில் வேறு எந்த மாநில தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு.

இப்படி இருக்கையில், பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்ட பின்பு, அண்ணாமலை மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக பாஜகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பேச்சாளர் கல்யாண ராமன், மற்றும் எந்த பக்கமும் நிலையில்லாமல் தன்னை அரசியல் விமர்சகர் என்று கூறிக்கொண்டு சுற்றி வரும் சவுக்கு சங்கர் போன்றோர் அண்ணாமலை குறித்து பரப்பிய அவதூறு அனைத்தும் பொய் என நிரூபணமாகி உள்ளது.

குறிப்பாக நேரடியாகவே அண்ணாமலை குறித்து இவர்கள் பரப்பி வந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைத்துள்ளது பிரதமர் மோடியின் இந்த செயல்பாடு. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள், இனி அண்ணாமலைக்கு பாஜகவில் இடமில்லை, அவர் தனிக்கட்சி தொடங்க போகிறார்கள் என்றும், இதில் உக்கட்டமாக திமுகவிடம் இருந்து பணம் பெற்று கொண்டு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போகிறார் என்றெல்லாம் அள்ளி வீசி வந்தனர் அண்ணாமலைக்கு எதிரானவர்கள்.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற அயர்ன் மேன் போட்டியில் பங்கேற்க்க அண்ணாமலை சென்றதை மிக உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்று இருந்தது கோவா பாஜக, மேலும் அயர்ன் மேன் போட்டியை வெற்றிகரமாக முடித்த அண்ணாமலைக்கு, நேரடியாக பிரதமர் வாழ்த்து தெரிவித்த செய்தியின் உள்ளே பல உள்அரசியல் இருப்பதை பார்க்க முடிந்தது.

இது தகுறித்து பிரதமர் மோடி தனது x பக்கத்தில், கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாக கூறிய அவர், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, பாஜகவின் இளம் சகாக்களான அண்ணாமலையும் , தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் பொதுவாகவே, தன்னுடைய அமைச்சரவையில் இருப்பவர்களை சகாக்கள் என்று அழைப்பார் பிரதமர், ஆனால் அண்ணாமலையை தன்னுடைய வாழ்த்து செய்தியில் தன்னுடைய சகாக்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளது, அண்ணாமலைக்கு மிக பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்றும், மேலும் பிரதமரின் இந்த வாழ்த்து செய்தி மூலம், இதுவரை அண்ணாமலை மீது பிரதமர் மோடி கோபத்தில் உள்ளார், பாஜக டெல்லி தலைமை ஓரம் காட்டிவிட்டது என வாயால் வடை சுட்டு வந்த வாய் வியாபாரிகளுக்கு முக்குடைபட்ட சம்பவமாக அமைத்துள்ளது.