இந்தியாவே உற்று நோக்கி பார்த்த பீகார் தேர்தலில் ஹிமாலய வெற்றி பெற்றுள்ளது பாஜக + நிதிஷ்குமார் கூட்டணி. படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டணி. பீகார் மக்கள் மத்தியில் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ள நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை நன்கு உணர்ந்து தொடர்ந்து நிதிஷ்குமார் உடன் கூட்டணி அமைத்து வருகிறது பாஜக.
மேலும் பாஜக அதிக தொகுதியில் வெற்றி பெற்று, நிதிஷ்குமார் குறைந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் கூட, நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க பாஜக முன் வருவதும் கூட, நிதிஷ்குமார் உடன் கூட்டணி இல்லாமல் பாஜக பீகாரில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தான். மேலும் லல்லு பிரசாந் என்றால் ஊழல் , நிலஅபகரிப்பு , அடாவடி என்கிற தோற்றம் இன்னும் பீகார் மக்கள் மத்தியில் உண்டு.

பரபரப்பாக நடந்த பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தொழில் தொடங்க 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதிஷ்குமார் அறிவித்தார். இதற்கு போட்டியாக ,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 30 ஆயிரம் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என தேஜஸ்வி யாதவ் அறிவிக்க, ஆனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியை பீகார் மக்கள் நம்பவில்லை.
மேலும் பாஜக கூட்டணியில் இருந்த சிறிய கட்சியை தேர்தலுக்கு கடைசி நேரத்தில் துணை முதல்வர் தருகிறோம் என ஆசை காட்டி வரவழைத்து 12 தொகுதி ஒதுக்கியத்தில் வெறும் 1 தொகுதியில் மட்டும் அந்த கட்சி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் நிலை தான் மிக பரிதாபத்தில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 61 தொகுதியில் போட்டியிட்டு 19 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த முறை 61 தொகுதியில் போட்டியிட்டு, இரட்டை இலக்கை கூட அடைய முடியாமல், ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெற்று பீகாரில் காங்கிரஸ் என்கிற கட்சி தடம் தெரியாமல் போனது என்று சொல்லும் வகையில் அமைத்துள்ளது பீகார் தேர்தல் முடிவுகள்.
காங்கிரஸ் கட்சி சொந்த பலம் இல்லாமல், கூட்டணி கட்சிகள் மீது சவாரி செய்து, இதுவரை சிறு சிறு வெற்றியை பெற்று வந்த நிலையில், இனி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் , மற்ற கட்சிகளும் அழிவை நோக்கி செல்லும் என்பதை உணர்த்தியுள்ளது பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள். அந்த வகையில் தற்பொழுது பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்கும், என்கிற எச்சரிக்கை மணியாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அமைந்து இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அண்ணா அறிவாலயத்தில் முதல் தளத்தில் அன்றை முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளை வருமான வரித்துறை மூலம் விசாரணை நடந்த வைத்து, இரண்டாவது தளத்தில் திமுகவை மிரட்டி அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை பெற்று, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதன் பின்பு கூடா நட்பு கேடாய் முடிந்தது என காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினார் கருணாநிதி. ஆனால் மீண்டும் காங்கிரசை தற்பொழுது தூக்கி சுமந்து வரும் நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமந்தால் பீகார் தேர்தலில் என்ன நடந்ததோ அதே நிலை தான் என்பதை உணர்ந்த திமுக தற்பொழுது காங்கிரசை கைகழுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி விஜய் உடன் கூட்டணி அமைக்க அதிக தொகுதிகளை கேட்டு வந்த நிலையில் தற்பொழுது விஜய் தரப்பிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் குறைந்த தொகுதிகளே கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

