எப்படியோ மருத்துவர் ராமதாஸ் சாதித்து விட்டார்.! பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி.!

0
Follow on Google News

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி வெற்றிக்கு ஏற்ப காய்களை நகர்த்தி வருகிறார். எடப்பாடி நகர்த்தும் ஒவ்வொரு காய்களிலும் சாமர்த்தியமாக மக்களை கவர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் விவசாய கடன் தள்ளுபடி தொடங்கி தற்போது, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி காட்டி வருகிறது.

வன்னியர்ககளுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக தலைவர் ராம்தாஸ் நீண்ட நாட்களாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து வந்தார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவாக முதல்வர் எடப்பாடி நிறைவேற்றினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர பாமக இதை நிபந்தனையாகவே வைத்தது.

தற்போது இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்டதால் அதிமுக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட 20 சதவீதம் இட ஒதுக்கீடு சலுகையில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டால் வேறு சமூகத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. எப்படியோ ராம்தாஸ் சாதித்து விட்டார்.