புனிதமான திருப்பரங்குன்றம் மலையின் மீது காதல் ஜோடிகளின் லீலைகள்.! நாளுக்கு நாள் எல்லை மீறும் ஆபாச அட்டுழியங்கள்.!நடவடிக்கை எடுக்குமா காவல்துறை.?

0
Follow on Google News

மதுரை மாவட்டம் முருகனின் முதற்ப்படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி சித்தர் ஜீவசமாதி, காசிவிஸ்வநாதர் திருக்கோவில் மற்றும் உச்சி பிள்ளையார் கோவில், காசிக்கு நிகரான தீர்த்தம் என பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளது. எனவே இதனை தரிசனம் செய்ய பக்தர்கள் அமாவாசை பௌர்ணமி பிரதோசம் போன்ற நாட்களில் அதிகமான அளவில் வந்து செல்கின்றனர் மேலும் மோட்ச தீபம் ஏற்றுவதற்கும் வந்து செல்கின்றனர்.

இந்த மலை பகுதியில் பாறைகள் செடி கொடிகள் என அதிகமாக உள்ளது, இதனை பயன்படுத்தி இங்கு வரும் காதல் ஜோடிகள் காதல் எனும் பெயரில் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள காதல் ஜோடிகள் புனிதமான திருப்பரங்குன்றம் கோவில் மலையை உல்லாச விடுதி போல் பயன்படுத்துவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் குற்றசாட்டு கூறுகின்றனர், அதிகமாக இரு சக்கர வாகனங்களில் வரும் காதல் ஜோடிகள் மலைக்கு பின்புறம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு அருகில் வாகனத்தை நிறுத்துகின்றனர்.

பின்பு அந்த படி வழியாக மலை மேல் ஏறி செல்லும் காதல் ஜோடிகள் மறைவான இடங்களை தேடி அங்கே முகாமிட்டு, நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டிய வேலைகளை வெட்ட வெளியில் செய்வது, அங்கே குடும்பத்துடன் வரும் பக்தர்கள் சங்கடத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பகல் நேரங்களில் மலையில் மறைவான இடங்களில் லீலைகளில் ஈடுபடும் காதல் ஜோடிகள், மாலை நேரங்களில் மலைக்கு ஏறும் படிக்கட்டு வழியில் அமர்ந்து கொண்டு எல்லை மீறி லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலையின் மேல் “ஓம்” என எழுதப்பட்ட கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில், ஒரு காதல் ஜோடி லீலையில் ஈடுபட்டதை கீழே இருந்து சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் அந்த வீடியோ தெளிவாக இல்லாததால் அந்த காதல் ஜோடி முகம் தெளிவாக தெரியவில்லை, புனித தளமான முருகன் கோவில் மலை காதல் ஜோடிகளின் லீலைகளுக்கு ஏற்ற இடமாக தற்போது மாறியுள்ளது.

மேலும் சமூக விரோதிகள் இங்கு சீட்டு விளையாடவும், மது அருந்தவும் என சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் இங்கு வரும் பக்தர்கள் வருவதற்கே அச்சப்படுகின்றனர், ஆகையால் இதன் மீது உடனடி நடவடிக்கை தேவை என கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். இது பற்றி அங்கு வருகை தரும் பக்தர்களிடம் கேட்ட போது காதல் ஜோடிகள் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதமாக ஆபாச வேலைகளில் ஈடுபடுகின்றனர் காதல் எனும் பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .