சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர இருக்கும் டாக்டர் படத்தில் சோ பேபி பாடலில் அனிருத் கலக்கிடாப்புல…

0
Follow on Google News

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மார்ச்26, மாதம் வெளியாக இருக்கும் டாக்டர் படத்தின் “சோ பேபி” பாடல் வெளியீடு. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் பிப்ரவரி 25 மாலை 5 மணி அளவில் வெளியாவதாக படக்குழுவினர் சார்பில் ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சொன்ன நேரத்தில் பாடல் வெளியாகமல் அனைவரையும் எதிர்பார்க்க வைத்து சில நிமிடங்களில் “சோ பேபி” பாடல் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் இலட்சக்கணக்கானோர் பாடலை கேட்டு படக்குழுவினருக்கு ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யத் தொடங்கினார்.
“அவள் முகம் பார்த்து நான் இன்று தடுமாறினேன்.”
“நிழல் தொட வேர்த்து உயிர் கொண்ட ஆகி சிலையாகிறேன்.” என்ற பாடலின் ஆரம்ப வரிகள் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

இதுவரை 36 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்துள்ளனர். “சோ பேபி” பாடல் வைரலானது. சிவ கார்த்தியின் வரிகளில் அனிருத் இசையில் பாடல் காதலை இசைக்க தொடங்குகிறது. வெஸ்டர்ன் + கிளாசிக்கல் கலந்து இசையை அர்ப்பணித்தார் அனிருத்.