தேர்தல் வந்தாச்சு… கூடவே புதிய கட்டுப்பாடுகளும் வந்தாச்சு…5 பேர்களுக்கு மேல் ஒட்டு கேட்டு செல்லக்கூடாது.!

0

தேர்தல் தேதி எப்போ எப்போ என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போது, தேர்தல் ஆணையம் எதிர்பார்க்காத நேரத்தில் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இன்று முதல் தமிழகம் தேர்தல் கோலாகலம் தான். தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது, வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு திரும்ப பெற கடைசி தேதி மார்ச் 22 ம் தேதியும், வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதியும், வாக்கு என்ணிக்கை மே 2ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இதனை தொடர்ந்து, தமிழகத்திற்கான முக்கிய தேர்தல் கட்டுப்பாடு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளராக அலோக் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திற்கான செலவின பார்வையாளர்களாக பாலகிருஷ்ணன்,மதுமாஹன் ஆகியோரும், தமிழகத்திற்கான ஐபிஎஸ் அதிகாரி தர்மேந்திரா குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார், இந்த சட்டமன்றத் தேர்தல் மிக பெரிய சவாலாக தேர்தல் ஆணையத்துக்கு இருக்க கூடும் என்பதால் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தாங்கள் போட்டியிடும் பகுதியில் பிரச்சாரத்திற்கான அனுமதியை ஆன்லைனில் பெற வேண்டும். ஓட்டு கேட்க வேட்பாளர்கள் வீடு வீடாக 5பேர் மட்டுமே செல்ல வேண்டும். 5 வாகனங்களுக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல கூடாது. தமிழகத்தில் கூடுதலாக 1மணி நேரம் வாக்கு பதிவுகள் நடைபெறும். வாக்களிக்கும் வீடியோ பதிவு செய்யப்படும். போன்ற தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.