படிச்சு படிச்சு சொன்ன செங்கோட்டையன்…. விஜயை திசை திருப்பிய ஆதவ் … காங்கிரஸால் முதல்வர் பதவி ஏற்புக்கு ஆப்பு…

0
Follow on Google News

முதல்வராக 7ம் தேதி தவெக தலைவர் பதவி ஈர்ப்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தடபுட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு, விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது தகவல் தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறது. இது அனைத்துமே தவெக உடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்த பின்பே அரங்கேறிய சம்பவம் என்பதும், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையான 118 தொகுதிகள் இல்லாத நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக கோர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வந்திருக்கிறார், மேலும் பாமக தரப்பிலும் செங்கோட்டையன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள், எடப்பாடி இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என்றாலும் கூட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி பக்கம் நிற்பதால் தவெகவுக்கு அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்பு இருந்தது, குறிப்பாக துணை முதல்வர் உட்பட அமைச்சரவையில் இடம் ஆகியவை பெறுவதற்கான முடிவில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் செங்கோட்டையனிடம் பேசி வந்து இருக்கிறார்கள்.

இதற்கு இடையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் ஆதவ் அர்ஜுனா பேசி வந்திருக்கிறார், காங்கிரஸ் கைவசம் வெறும் 5 தொகுதிகள் தான் உள்ளது இருந்தும், காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்த பின்பு, அவர்களை தொடர்ந்து கம்யூனிஸ்ட் , விசிக, போன்ற கட்சிகள் வந்துவிடும் இது போன்ற சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைத்து விடலாம் என்று விஜய்யிடம் ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து எங்கே மற்ற எந்த காட்சியாவது முதலில் சென்று தவெகவில் துண்டை போட்டு விடக்கூடாது என வெறும் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முண்டியடித்து கொண்டு திமுகவுக்கு கல்தா கொடுத்துவிட்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளே வந்த பின்பு தான் விஜய்க்கு சிக்கல் தொடங்கி இருக்கிறது, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா எதிர்பார்த்தது போன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் , விசிகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வரவில்லை.

மேலும் அதிமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் இருக்கும் இடத்திற்கு தங்கள் வருவதற்கு யோசிக்க வேண்டும் என ஒரே போடாக செங்கோட்டையனிடம் தெரிவித்து இருக்கிறார்கள் சி வி சண்முகமும், எஸ் பி வேலுமணியும், அதுமட்டுமின்றி அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக அன்புமணி ராமதாசை தொடர்பு கொண்டு தவெக தரப்பு பேச காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்பவில்லை, இருந்தாலும் பரிசீலனை செய்வதாக தெரிவித்து விட்டாராம் அம்புமணி ராமதாஸ்.

இப்படி ஒரு சூழலில் தனி மெஜாரிட்டிக்கான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் கையப்பமிட்ட பட்டியலை கொடுத்தால் தான் பதவி பிரமாணம் செய்வேன் என்று தமிழக ஆளுநர் தவெக தரப்பிடம் தெரிவிக்க, விஜய்க்கு வழங்கப்பட்ட முதல்வருக்கான பாதுகாப்பு முதற்கொண்டு திரும்ப பெறப்பட்டு இருக்கிறது, செங்கோட்டையன் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அதிமுக தரப்பில் இருந்து 32 க்கு மேற்பட்ட எம் எல் ஏக்களை தவெக பக்கம் கொண்டு வருவதற்கு முயற்சித்து வந்த நிலையில்,

வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக கண் காங்கிரஸ் என்கிற தேவையில்லாத ஆணியை தவெகவுக்குள் ஆதவ் அர்ஜுனா கொண்டு வந்து விஜய் முதல்வராக பதவி ஏற்பு விழாவுக்கு ஆப்பு வைத்து விட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here