கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 சட்டசபை தேர்தலில் 5க்கு 5 என வெற்றி பெற்று சம பலத்துடன் இருந்தது. இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதுரையை உள்ள 10 தொகுதிகளிலும் மொத்தமாக அல்ல வேண்டும் என திமுகவும், அதிமுகவும் இரண்டு கட்சிகளும் மிக தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கைவசம் இருக்கும் மதுரை மேற்கு தொகுதியை கைபோற்றியே ஆக வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தொகுதிக்குள் பம்பரமாக சுற்றி வருகிறார்.
அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மதுரை கிழக்கு தொகுதியில் அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தொடர்ந்து பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில் மேலும் , கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அமைச்சர் மூர்த்தியை எதிர்த்து போட்ட்டியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் கோபாலகிருஷ்ணன் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளது அமைச்சர் மூர்த்திக்கு மேலும் கூடுதல் பலமாக உள்ளது.

இந்நிலையில் அதிமுக கோட்டையாகவும், 2011, 2016, 2021 தேர்தல்களில் தொடர்ந்து இதே தொகுதியில் செல்லூர் ராஜு மூன்று முறை வெற்றி பெற்று செல்லூர் ராஜுவின் கோட்டையாக திகழும் மதுரை மேற்கு தொகுதியை வரும் 2026ல் கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற நோக்கில், திமுக மாவட்ட செயலாளரான கோ தளபதியிடம் இருந்த தொகுதியை எடுத்து திமுக மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தியிடம் ஒப்படைத்த முதல்வர் முக ஸ்டாலின் இந்த தொகுதியை கைப்பற்றியே ஆகவேண்டும் என அசைன்மென்ட் கொடுத்து இருந்தார்.
கடந்த ஒரு வருடமாக மதுரை மேற்கு தொகுதியில் பம்பரமாக சுற்றி வரும் அமைச்சர் மூர்த்தியின் செயல்பாடுகளால், இந்த தொகுதியில் திமுகவின் கை சற்று ஓங்கி இருக்க, அழகிரியின் ஆதரவாளர்களாக திமுகவில் இருந்த எஸ் ஆர் கோபி, பி எம் மன்னன் ஆகியோரை அதிமுகவில் இணைத்து மதுரை மேற்கு தொகுதியில் தன்னுடைய வெற்றிக்கு பணியாற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய படை பலத்தை அதிகரித்ததின் விளைவாக தற்பொழுது மதுரை மேற்கு தொகுதி, திமுக – அதிமுக இடையில் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, மதுரை கிழக்கு தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் அமைச்சர் மூர்த்தி போட்டியிட இருக்கிறார் என்றாலும், அவருடைய முழு கவனமும் மதுரை மேற்கு தொகுதி பக்கம் உள்ளது, இதற்கு முக்கிய காரணம் இம்முறை மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்து விடுவார் அமைச்சர் மூர்த்தி என்கிற முழு நம்பிக்கையில் இருக்கும் முதல்வர் முக ஸ்டாலினின் நம்பிக்கையை காப்பாற்றியே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் அமைச்சார் மூர்த்தி.
இந்த பரபரப்புக்கு மத்தியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சின்னம்மா, 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார், ஆனால் அதே தேர்தலில் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வாங்கிய மக்கள் நீதிமய்யம், மற்றும் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் தற்பொழுது திமுக உடன் கூட்டணியில் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பலமாக உள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ள நிலையில், திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட சின்னம்மா, திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் பாலாஜி, திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜி பி ராஜா ஆகியோரில் ஒருவர் மதுரை மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிற தகவல் உறுதியாகி உள்ளது.
அந்த வகையில் மதுரையில் உள்ள பத்து தொகுதிகளில் மதுரை மேற்கு தொகுதியில் வர இருக்கும் தேர்தல் மிக கடுமையான போட்டியாக உருவெடுத்துள்ள நிலையில், மதுரை மேற்கு தொகுதியை பொறுத்த வரை அதிமுக vs திமுக என்பதை தாண்டி, செல்லூர் ராஜு Vs மூர்த்தி என மாறியுள்ளதை பார்க்க முடிகிறது.

