பின்னணி பாடகி மற்றும் சர்ச்சையான பேச்சுக்கு பெயர் போன சுசித்ரா பேசியிருக்கும் ஒரு வீடியோ இன்னும் விஜய் பிரச்னையில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது. நடிகர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். தனது கணவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று அவர் அந்த குற்றச்சாட்டில் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பலரும் அந்த நடிகை திரிஷா தான் என்று கூறினார்கள். ஆனால் அதை விஜய் மனைவி அந்த மனுவில் உறுதிப்படுத்தவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வந்தனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரே கலர் டோனில் உடை அணிந்து கொண்டு திருமண விழாவுக்கு விஜயும் திரிஷாவும் ஜோடியாக வந்தனர். நீங்கள் இந்த விஷயத்தில் திரிஷா என்று யாரும் சந்தேகப்படாதீர்கள். திரிஷாதான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்பது போல விஜய் நடந்து கொண்டார்.

முதலில் சங்கீதாவை சரமாரியாக சைபர் தாக்குதல் செய்த விருச்சுவல் வாரியர்ஸ் இந்த ஜோடி வருகைக்குப் பிறகு திரிஷாவை பங்கம் செய்து கிழித்து எடுத்து வருகிறார்கள். விஜய்க்கு எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை எல்லாம் நடிகை திரிஷா கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில் குந்தவையை வீட்டிலேயே குந்த வையுங்கள். பிரச்னை வராமல் இருக்கும் என்று பேசியதற்கு மட்டும் கண்டனம் தெரிவித்தார்.
மற்றபடி இந்த விஷயத்தில் அனைவருக்கும் அவர் பதில் சொல்ல தயாராக இல்லை. வழக்கம் போல் தனது ஃபன் ஆக்டிவிட்டிகள் குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மேல் போஸ்ட் போட்டுக் கொண்டு ஜாலியாக இருந்து வருகிறார். இதற்கிடையே லியோ படத்தில் மட்டும் விஜயும் திரிஷாவும் சேர்ந்து நடிக்காமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்றும் ஒரு தரப்பினர் லோகேஷ் கனகராஜையும் இதில் இழுத்து வைத்து பேசி வருகிறார்கள். ஏனெனில் அதில்தான் விஜய் திரிஷா இருவரும் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா இந்த விவகாரத்தில் புதிய அணுகுண்டு ஒன்றை போட்டு இருக்கிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது, திரிஷாவிடம் வாலை சுருட்டிக்கொண்டு நாய்க்குட்டி போல் தான் விஜய் அடங்கி இருப்பார். விஜய் திரிஷா ரெண்டு பேருமே கூத்தாடிகள்தானே? அந்த புத்தி தான் அவர்களுக்கு இருக்கும். எப்படியோ திரிஷா மீண்டும் விஜய் வாழ்க்கைக்குள் வந்துவிட்டார். இது அவரது ஃபவரை தான் காட்டுகிறது.
திரிஷாவும் விஜயும் ஆறு மாதங்கள் ஜல்சா செய்வதற்கு லோகேஷ் கனகராஜ் தான் காரணம். திரிஷா கருப்பு இதயம் கொண்ட ஒரு பெண். எப்ஸ்டீனின் பெண் வெர்ஷன்தான் இந்த திரிஷா. அவர் மிகப்பெரிய சீக்ரெட் சொசைட்டி வைத்திருக்கிறார். நிறைய காம பார்ட்டிகள் நடத்துவார். யாராலும் அவரை கண்ட்ரோல் செய்ய முடியாது. கண்ட்ரோலில் இருப்பது மாதிரி நடிப்பார். திரிஷாவின் கேரியர் காலியாகி விட்டது. கருவாடு மாதிரி ஆகிவிட்டார்.
விஜய்க்கு எப்போதுமே சுயபுத்தி கிடையாது. அவரே ஒரு அரக்கன் தான் என்று பாடகி சுசித்ரா அந்த நேர்காணலில் விஜய் திரிஷா விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் திரிஷா விவகாரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலையும் உருளுவது ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதமாக மாறியிருக்கிறது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் திரிஷா தரப்பில் இருந்து எந்த விளக்கமோ பதிலோ இல்லை. அதே நேரத்தில், மனைவி சங்கீதா விஷயமெல்லாம் வொர்த்தே இல்லை என்றும் விஜய் பேசியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

