பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஜோடியாக பங்கேற்றது இந்த பிரச்சனையை மேலும் சூடாக்கி உள்ளது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல விஜய் திரிஷா விவகாரம் இன்னும் மக்கள் மத்தியில் அதிகளவில் விவாத பொருளாகியுள்ளது. சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தங்க நிறத்தில் ஆன பட்டாடைகளை அணிந்து ஒரே காரில் ஜோடியாக வந்தனர். மணமக்களை வாழ்த்தி விட்டு அவர்கள் இருவரும் ஒன்றாகவே அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறினர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கீதா விஜய் மீது சுமத்தியதாக கூறப்படும் புகார்கள் குறித்து இப்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் என் கணவர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய ஒரு உறவு இருப்பதாகவும் அந்த நடிகையின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் மனுவில் சங்கீதா கூறியிருந்தார். மேலும் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த விவகாரம் தனக்கு தெரிய வந்ததாகவும் அப்போது விஜயிடம் இதுகுறித்து பேசிய போதும் அவர் அந்த நடிகையுடன் இருந்த உறவை விடவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தான் தன் கணவரை விட்டு பிரிவதாகவும் அவர் விவாகரத்து மனுவில் கூறியிருந்தார். மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் நான் வெளியிடுவேன் என்றும் சங்கீதா அதில் கூறியிருந்தார். அதனால் தான் நடிகர் விஜய், திரிஷாவின் பெயரை சங்கீதா சொல்வதை விட நாமே மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து விடலாம் என்ற ஒரு கடுப்பான மனநிலையில் இந்த திருமணத்திற்கு திரிஷாவை தன்னுடன் ஜோடியாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மனைவியை வெறுப்பேற்ற நினைத்த நடிகர் விஜய், இதனால் தவெக கட்சிக்கும் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் புகழுக்கும் ஏற்படும் களங்கம் குறித்து யோசிக்க சுத்தமாக மறந்து விட்டார் என்று விமர்சனங்கள் பரவலாக இருந்து வருகின்றன. இத்தகைய ஒரு சூழலில் நடிகை திரிஷா ஒரு பழைய நேர்காணலில் பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் திரிஷா பேசுகையில், வீடு என்பது ஒரு இடம் அல்ல. அது ஒரு நபர். எனக்கு விஜய் விஜய் தான் அந்த நபர். அவரிடம்தான் நான் அமைதி அன்பு மற்றும் மரியாதையை காண்கிறேன் என்று திரிஷா பேசியுள்ளார்.
இதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தவெக சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் பேசிய நடிகர் விஜய், சமீப காலமாக என் மீது பல்வேறு புகார்களும் சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. இதற்கு எனது ரசிகர்கள் வருத்தமடைய கூடாது. உங்கள் வருத்தம் எனக்கு கவலை அளிக்கிறது. இது போன்ற வீணான விவாதங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அது அந்த அளவுக்கு ஒர்த் இல்லை.
நீங்கள் மக்கள் நல பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இந்த வதந்திகளால் உங்களை துன்புறுத்திக் கொள்ள வேண்டாம் என்று பேசி இருக்கிறார். மேலும் விஜயின் மனைவி சங்கீதா தன்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருக்க விடாமல் விஜய் விரட்டுவதாகவும் அந்த வீட்டுக்குள் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திரிஷா விஜய் தான் என் வீடு என்று பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. விஜயை பொருத்த வரை திரிஷா தான் அவரது வீடு, உலகம் எல்லாம். தனது மனைவி பிள்ளைகள் குடும்பமும் தவெக கட்சியும் கூட இரண்டாம் பட்சம்தான் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

