SP வேலுமணி Vs செந்தில்பாலாஜி… யார் கைவசம் கோவை … கொங்கு மண்டல தேர்தல் கள நிலவரம்….

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழக முழுவதும் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெற்று ஆட்சியை அமைத்தாலும் கூட, கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதிகள் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் உள்ள பத்துக்கு பத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று கொங்கு எங்கள் கோட்டை என்று தற்போது வரை கொக்கரித்து வருகிறது.

இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி, இந்த நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைந்த பின்பு முதல்வர் மு க ஸ்டாலின் முழு கவனமும் கொங்கு மண்டல பக்கம் திரும்பியது.

அதாவது கோவையில் உள்ள 10 தொகுதியையும் 2021ல் கோட்டை விட்டது போன்று அடுத்த 2026 இல் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, கோவையில் உள்ள 10 தொகுதிகளில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வியூகத்தை வகுத்தார் முதல்வர் முக ஸ்டாலின், அதற்கான முழு பொறுப்பும் செந்தில் பாலாஜி கைவசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து கோவையை குறி வைத்து செந்தில் பாலாஜி வேலை செய்து வருகிறார், குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் உள்ள கிணத்துக்கடவு தொகுதியில் மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் திமுக வெறும் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது அதே போன்று கவுண்டம்பாளையம் தொகுதியில் வெறும் 4000 வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் கோவையில் கவுண்டர் சமுதாயத்திற்கு பின்பு கணிசமாக நாயுடு சமுதாயத்தினர் உள்ளனர், அந்த வகையில் தற்பொழுது தேமுதிக திமுக கூட்டணியில் இடம் பெற்று இருப்பது கோவையில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்கின்ற நம்பிக்கையில் திமுக தலைமை இருக்கிறது.

அதேபோன்று கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கடும் கடுமையான போட்டியாளராக இருந்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்பொழுது திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வரும் கோவையில் இம்முறை பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைமை வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் வேலை செய்து வரும் செந்தில் பாலாஜி.

இம்முறை கரூரில் போட்டியிடாமல் கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இருந்தாலும் செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தோல்வியடைய செய்வோம் என்று தீவிரமாக வேலை செய்து வருகிறார் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி. இந்த நிலையில் தற்போது கோவை 10 தொகுதிகளிலும் திமுகவா – அதிமுகவா என்பதை தாண்டி எஸ் பி வேலு மணியா அல்லது செந்தில் பாலாஜியா என்று அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

அந்த வகையில் மீண்டும் அதிமுக 10 இடங்களிலும் வெற்றி பெற்று கொங்கு மண்டலத்தின் நிரந்தர தளபதி எஸ் பி வேலுமணி தான் என்பதை நிரூபிக்குமா.? அல்லது கொங்கு மண்டலத்தில் திமுகவின் கை ஓங்கி கொங்கு மண்டலத்தின் எப்போதும் இனி செந்தில் பாலாஜி தான் தளபதி என்பதை நிரூபிக்குமா என்பது அடுத்தடுத்து வரும் தேர்தல் பிரச்சாரங்களில் கால நிலவரம் குறித்து மாறுபடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here