2026 சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மற்ற கட்சி வேட்பாளர்கள் நாமினேஷன் தாக்கல் செய்யப்பட்டு வந்தாலும், தமிழகமே பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு தான் அரசியல் களத்தில் விவாத பொருளாக உருவெடுத்து இருந்தது, அந்த வகையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான அடுத்த வினாடியே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதில் உச்சகட்டமாக திருப்பத்தூர் தொகுதியில் திமுக அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி போட்டியிட இருப்பது, திருப்பத்தூர் திமுக வேட்பாளரான பெரிய கருப்பன் தரப்பை கதி கலங்க செய்துள்ளது, தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வரும் திருமாறன் ஜி திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட இருப்பது, அந்த தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பன் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மக்கள் பெரியகருப்பனை வீழ்த்த சரியான நபர் நம்ம தொகுதிக்கு கிடைத்து விட்டார்கள் என்கிற மகிழ்ச்சியை பரிமாறி வருவதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அமைச்சர் பெரிய கருப்பன், இதில் இரண்டு முறை மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார், ஒரு முறை வெறும் 2 ஆயிரம் சொச்சம் வாக்குகள் விதியசத்திலும், மற்றொரு முறை வெறும் 6 ஆயிரம் சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்.
ஆனால் அமைச்சர் பெரியகருப்பனை திருப்பத்தூர் தொகுதியில் வீழ்த்தவே முடியாது என உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாய பிம்பம் இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜியால் உடைக்கப்படும் என்கிறது திருப்பத்தூர் அரசியல் கள நிலவரம். தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் மீது திருப்பத்தூர் மக்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அதிருப்தி , மற்றும் ஒட்டு மொத்த திமுக ஆட்சியின் மீதே தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, திருப்பத்தூர் தொகுதி மக்கள் மத்தியிலும் உண்டு.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், குறிப்பாக தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியுடன் சேர்த்து அமமுக போன்ற கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது, குறிப்பாக கடந்த 5 வருடத்தில் பாஜகவின் அசூர வளர்ச்சி, மேலும் சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே அதிமுகவுக்கு இருக்கும் வலுவான கட்டமைப்பு, இதில் குறிப்பாக அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் ஸ்டார் கேண்டிடேட் ஆன திருமாறன் ஜி என திருப்பத்தூர் தொகுதியில் அசூர பலத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் இருப்பது, திருமாறன் ஜி மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் இவர்களுக்கு இடையிலான போட்டி கடுமையாகி இருப்பதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு திருப்பத்தூர் தொகுதியை திமுகவின் பிடியில் இருந்து மீட்கும் வேட்பாளராக திருமாறன் ஜி இருப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பு வெளியான பின்பு, சென்னையில் இருந்து தென் தமிழகம் திரும்பிய திருமாறன் ஜிக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிக உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் தீவிர பிரச்சாரம் மூலம் திருப்பத்தூர் கள நிலவரம் இன்னும் சூடு பிடிக்க இருக்கையில், அடுத்தடுத்து யார் போட்டியில் முந்துகிறார்கள் என்பது அடுத்தடுத்து விடியோவில் பார்ப்போம்.

