மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி தான் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி. 2011 முதல் இங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதி முற்றிலும் மதுரை நகரப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது.
அதாவது பழைய மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியாக இருந்த பகுதிகளான வைகை வடகரையில் உள்ள ஆழ்வார்புரம், செல்லூர், செனாய்நகர் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய புதிய தெற்கு சட்டமன்றத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியின் 9, 10, 16, 19, 39, 43 முதல் 59 வரையிலான வார்டுகள் மதுரை தெற்கு தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவற்றில் முனிச்சாலை, லெட்சுமிபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ஓலைப்பட்டினம், சீனிவாசப்பெருமாள் கோயில் பகுதிகள், கொண்டித்தொழு தெருக்கள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம், கீழ வாசல், காமராஜர்புரம், சிந்தாமணி, வாழைத்தோப்பு, பாலரெங்காபுரம், பழைய குயவர் பாளையம், செல்லூர், மதிச்சியம், வில்லாபுரம், தெப்பக்குளம், ஆழ்வார்புரம், செனாய்நகர் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.
இந்த தொகுதியில் பெரும்பானமையாக முக்குலத்தோர் சமூகம், அடுத்ததாக சௌராஷ்டிரா சமூகம் அதற்கு அடுத்ததாக வெள்ளார் சமூக உள்ள தொகுதி இந்த தெற்கு தொகுதி . 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த ஆர்.அண்ணாதுரை வெற்றி பெற்றார்.
அதற்கு அடுத்து நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சரவணன் வெற்றி பெற்றார். அடுத்ததாக 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக மதிமுகவின் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த பூமிநாதன் களமுறங்கி வெற்றி பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி என பல முனை போட்டி நிலவிய போது பாஜக சார்பில் போட்டியிட்ட சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த ஏ ஆர் மஹாலக்ஷ்மி சுமார் 16 ஆயிரம் வாக்குகளை பெற்றார், அதாவது சுமார் 11 சதவிகித வாக்குகளை பாஜகவுக்கு பெற்று கொடுத்து பாஜகவின் பலம் என்ன என்பதை மதுரை தெற்கு தொகுதியில் 10 வருடங்களுக்கு முன்பே நிரூபித்து காண்பித்தவர் பாஜக வேட்பளராக போட்டியிட்ட ஏ ஆர் மஹாலக்ஷ்மி.
இந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூகத்தை தொடர்ந்து இருக்கும் சௌராஷ்டிரா மற்றும் வெள்ளாளர் சமூக வாக்குகள் இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்குகளாக உள்ளது, இதற்கு முன்பு வெற்றி வெள்ளார் சமூகம் , சௌராஷ்டிரா சமூகம் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள மதுரை தெற்கு தொகுதியில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது அடுத்தடுத்து நடக்கும் பிரச்சாரத்தை பொறுத்து தெரிய வரும்.
நடக்கும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் சிட்டிங் எம் எல் ஏ முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த பூமி நாதன் மீண்டும் போட்டியிடுகிறார், நாம் தமிழர் கட்சி சார்பில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சுமதி போட்டியிடுகிறார், தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறுபாண்மை சமூகத்தை சேர்ந்த ஜோ பீட்டர் போட்டியிடுகிறார், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் இந்த தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

