அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து திருப்பத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்க பட்டிருக்கும் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி, வேட்பாளர் பட்டியல் வெளியான நான்காவது நாள் செய்த தரமான சம்பவம் , அந்த தொகுதியின் சிட்டிங் எம் எல் ஏ அமைச்சர் பெரிய கருப்பனை கதி கலங்க செய்துள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் திமுக கூடாரமே ஆட்டம் கண்டிருக்கிறது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதில் திருப்பத்தூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜி, தேர்தல் பணிமனை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஊர்வலமாக கிளம்பியவர் , ஆங்கிலேயர்களை சிவகங்கை சீமையில் இருந்து ஓட ஓட விரட்டியடித்து சிவகங்கை சீமையை ஆட்சி புரிந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் வழிபாடு செய்த திருப்பத்தூர் பைரவன் கோவில்லுக்கு சென்ற திருப்பத்தூர் பாஜக வேட்பாளர் திருமாறன் ஜி அங்கே சுவாமி வழிபாடு செய்தார்.

அங்கிருந்து மன்னர் மருதுபாண்டியர்கள் தூக்கிலிட்டபட்டு வீரமரணம் அடைந்த திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மருது பாண்டியர்களின் நினைவுத் தூண் இருக்கும் இடத்தில் வணங்கி வேட்பு மனு தாக்கல் செய்ய சுமார் பல ஆயிரம் பேர் படை சூழ ஊர்வலமாக சென்ற திருமாறன் ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். திருப்பத்தூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 4வது நாளில் சுமார் ஆயிரக்கணக்கான ஆயிரம் பேர் கொண்ட மக்கள் படை சூழ தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, சிட்டிங் எம் எல் ஏ அமைச்சர் பெரிய கருப்பனை கதி கலங்க செய்யும் வகையில் இருந்தது.
மேலும் திமுகவுக்கு எதிராக , குறிப்பாக திருப்பத்தூரில் அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் வேட்பாளர் சாதாரண நபர் அல்ல, 20 வருடமாக திமுக பிடியில் இருக்கும் திருப்பத்தூர் தொகுதியை மீட்டெடுக்க வந்த அசூர பலம் வாய்ந்த வேட்பாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்து இருந்தது திருமாறன் ஜி இன்று பெரும் மக்கள் படையுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம்.
குறிப்பாக திருப்பத்தூர் தொகுதியில் திருமாறன் ஜி வேட்பு மனுதாக்கல் செய்த போது உடன் சென்ற மக்கள் கூறுகையில், சிவகங்கை சீமையை எப்படி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டி அவர்கள் பிடியில் இருந்து மீட்டெடுத்து மக்களுக்கு நல்லாட்சி செய்தார்களோ, அதே போன்று சுமார் 20 வருடமாக திமுக அமைச்சர் பெரியகருப்பன் பிடியில் இருந்து திருப்பத்தூர் தொகுதியை மீட்டெடுத்து திருப்பத்தூர் மக்களுக்கு நம்மை செய்ய வேண்டும் என தாமரை சின்னத்தில் போட்டியிடும் திருமாறன் ஜியை வாழ்த்தி கருத்துக்களை தெரிவித்தனர் அங்கே வேட்பு மனு தாக்களில் கலந்து கொண்ட மக்கள்.
மேலும் திருப்பத்தூர் தொகுதி மக்களுக்கு ஆளும் திமுக அரசின் மீது இருக்கும் அதிருப்தி, மற்றும் சிட்டிங் எம் எல் ஏ பெரியகருப்பன் மீது இருக்கும் அதிருப்திகளின் வெளிப்பாடு தான் திருமாறன் ஜி வேட்பு மனு தாக்களின் போது மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பெரும் கூட்டமாக இப்படி கலந்து கொண்ட சம்பவம் என்கிறது திருப்பத்தூர் அரசியல் களம்.
குறிப்பாக திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிராக பாஜகவின் தாமரை சின்னத்தில் யார் போட்டியிட போகிறார்கள் என்று தெரியமால் இருந்த நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிடுகிறார் என வேட்பாளர் பட்டியல் வெளியான அடுத்த 48 மணி நேரத்தில் தேர்தல் பணிமனை, அந்த தொகுதிக்கான தேர்தல் பிரச்சார யுக்திகள் என விறுவிறுப்பாக வேட்பாளர் திருமாறன் ஜி தரப்பில் இருந்து பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில்,
அடுத்த 2 வாரம் தேர்தல் பிரச்சாரம் காலம் என்றாலும் அடுத்த ஒரு வாரத்தில் திருப்பத்தூர் தேர்தல் களம் மிக பெரிய மாற்றத்திற்கு தயாராகி 20 வருட அமைச்சர் பெரியகருப்பன் சமராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

