ராமதாஸ்க்கு மூன்றாவது மனைவி… அன்புமணி போன்று மகன்… வெளியான பரபரப்பு …

0
Follow on Google News

பாமகவில் எப்போதெல்லாம் சலசலப்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அடிபடுவதும் சுசீலாவின் பெயர் தான் . சுசீலாவை ராமதாஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பின்பு, அவருக்கு விஸ்வகர்மா என்ற பெயரில் ராமதாஸ் அறக்கட்டளை ஒன்றையும் வைத்துக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறக்கட்டளையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அன்புமணி – ராமதாஸ் இடையே மோதல் வெடிக்க சுசீலா தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியில் மூக்கை நுழைத்து சுசீலா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அதுவே தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைவர் ஆவதற்கு முன்பு தனது லாபியில் வேட்பாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் நியமித்து வந்த சுசீலாவுக்கு அன்புமணி தலைமையில் சிறிதும் விருப்பமில்லை என சொல்லப்படுகிறது.

எனவேதான் ராமதாஸை ஆட்டி படைத்து கட்சியில் அன்புமணியவே ஓரம் கட்ட திட்டம் தீட்டப்பட்டதாகவும் கூறி ஷாக் கொடுக்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். இதனிடையே சுசீலா தனது இருப்பை உணர்த்தவும் தனக்கான அங்கீகாரத்தை பெறவுமே திட்டமிட்டு ராமதாஸ் உடனான தனிப்பட்ட புகைப்படங்களை லீக் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக ஈசிஆரில் நடைபெற்ற ராமதாஸ், சுசீலா ஜோடியின் பொன்விழா ஆண்டு காதல் கொண்டாட்டத்திற்கு மிக மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதுவும் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டபோதும் எப்படி இந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் என்றும் அன்புமணி தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் ராமதாஸுக்கு 3வது மனைவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் தலைவர் சி.என். ராமமூர்த்தி பிரபல யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. அப்போது பேசிய அவர் ” ராமதாஸ், 1965-ம் ஆண்டு சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார்.. சரஸ்வதி 5-ம் வகுப்பு வரை படித்திருந்தார்.. ராமதாஸ் அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ராமதாஸ் சுசீலாவை திருமணம் செய்து கொள்ளாமலே அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.. ஒருகட்டத்தில் சுசீலாவின் தாயார் வேறொருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்து விட்டார்.. சுசீலா திருமணமான உடன் திருவண்ணாமலைக்கு சென்று விட்டார்.. திருமணமான அன்றைய தினம் இரவே ராமதாஸ் ஆள் வைத்து சுசீலாவுக்கு தாலி கூட்டி வந்துவிட்டார்.. இது கள்ளக்காதல்..

இவர்கள் இருவரும் தவிர, ராமதாஸிற்கு 3வது மனைவியும் இருக்கிறார்.. அந்த பெண், அறந்தாங்கியை சேர்ந்தவர்.. இவருக்கும் ஒரு மகன், 2 மகள் உள்ளனர்.. அவரின் மகனை பார்த்தால் அன்புமணியை போலவே இருப்பார்.. அவருக்கும் ராமதாஸுக்கும் பிறந்த மகன் தான் அவர்.. ராமதாஸின் 3 மனைவிகளும் வெவ்வேறு சமுதாய சேர்ந்தவர்கள்.. ராமதாஸின் 3வது மனைவி தான் தென் தமிழ்நாட்டின் நிர்வாகிகள் நீக்குவது சேர்ப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்.. மற்றவர்கள் காதலித்தால் நாடகக் காதல் என்று ராமதாஸ் கூறுகிறார்..

ஆனால் அவர் செய்தால் தவறு இல்லையா..? ராமதாஸுக்கு 3வது மனைவி இருப்பதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.. 3வது மனைவிக்கு பிறந்த குழந்தைகளையும் படிக்க வைத்தார்.. அவரின் மகனுக்கு அறந்தாங்கியில் மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார்.. சுசீலா தான் வட தமிழ்நாட்டிற்கு கண்ட்ரோல்.. அவரின் 3வது மனைவி தென் தமிழ்நாட்டிற்கு கண்ட்ரோல்.. இது பாமகவின் பழைய நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்..” என்று தெரிவித்தார்..