மோடி கொடுத்த சர்ப்ரைஸ்…. குப்பையில் வீசப்பட்ட ராகுல்காந்தியின் கோரிக்கை…

0
Follow on Google News

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ஜிஎஸ்டி சீர் திருத்தங்கள், நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைத்துள்ளது, அந்த வகையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்துள்ள மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை நடுத்தர மக்கள் கொண்டாடி வருகிறார்கள். உயிர் காக்கும் மருந்துகளுக்கு இதுவரை 12 சதவிகித ஜி எஸ் டி இருந்து வந்த நிலையில் தற்பொழுது முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டு இனி ஜீரோ ஜிஎஸ்டி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் புற்றுநோய், அரிய வகை நோய்கள், மிகவும் தீவிர பாதிப்பிற்கு ஆளான நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு வரி ஏதும் இல்லை. மெடிக்கல் கிரேடு ஆக்சிஜன், டயக்னாஸ்டிக் கிட்ஸ், ரீகண்ட்ஸ், குளுகோமீட்டர், டெஸ்ட் ஸ்ட்ரைப்ஸ், கண் கண்ணாடி உள்ளிட்டவற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பயனப்டுத்தும் பள்ளி புத்தகம், பென்சில்கள்,கிரேயான்கள் போன்ற மாணவர்களின் அத்தியாவசிய பொருள்களுக்கு 0% ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிறிய வகை கார்கள், ஸ்கூட்டர்கள், பைக்குகளுக்கு 27–30% கலால் வரி மற்றும் VAT உடன் அதிக வரி விதிக்கப்பட்டு இருந்தன, மோடி அரசின் ஜிஎஸ்டி நடைமுறை மூலம் தற்பொழுது சிறிய வகை கார்கள், ஸ்கூட்டர்கள், பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 18% ஆகக் குறைக்கப்பட்டது.

வெண்ணெய், நெய், நம்கீன்கள், சாஸ்கள், பிஸ்கட்கள், போன்ற மளிகை பொருட்கள் 5% ஆகக் குறைக்கப்பட்டது, தினசரி மளிகை பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மாதமும் இல்லத்தரசிகளின் குடும்ப பட்ஜெட்டில் இனி சேமிப்பு அதிகமாகும், பல தலைமுறையாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் விதித்து இருந்த வரி நடுத்தர மக்கள் வாட்டி எடுத்து வந்தது. நடுத்தர மக்கள் ஆடம்பர பொருட்களான ஏசி, பிரிட்ஜ், கார், வாங்குவது கனவாகவே இருந்து வந்தது, மேலும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புக் வாங்குவதற்கு கூட காங்கிரஸ் ஆட்சியில் கூடுதல் வரி செலுத்தும் சூழல் இருந்து வந்தது.

ஆனால் மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு அதற்கெல்லாம் முற்று புள்ளி வைத்து, ஜிஎஸ்டி என்கிற எளிய முறை வரியை கொண்டு வந்து தற்பொழுது எளிய மக்களும் ஆடம்பர பொருட்களை வாங்கலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது மோடி அரசு. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், டிராக்டர்கள் போன்ற விவசாய பொருட்களுக்கு GST வெறும் 5% ஆகக் குறைக்கப்பட்டு விவசாயச் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி இருக்கிறது மோடி அரசு.

காங்கிரஸ் ஆட்சியில் நடுத்தர மக்களை, பண களஞ்சியமாக கருதி அவர்களிடம் இருந்து வரி என்கிற பெயரில் நடுத்தர மக்களை வாட்டி வதைத்தது காங்கிரஸ் ஆட்சி, ஆனால் பிரதமர் மோடி அந்த நடைமுறையை மாற்றி, நாட்டின் வளர்ச்சிக்கான வர்க்கம் தான் நடுத்தர மக்கள் என கருதி ஜிஎஸ்டி வரியை எளிமை படுத்தி இருப்பது குறிப்பிடதக்கது.

இதற்கு முன்பு ராகுல்காந்தி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வாரியாக 18% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அரிசி, கோதுமை, மருந்துகள், பால் போன்ற அதியவாசியா பொருட்களுக்கும் 18% வரி, மெர்சிடிஸ் கார்கள், பிஎம்டபிள்யூக்கள், சிகரெட்டுகள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கும் 18% வரி என்பது தான் ராகுல்காந்தியின் கோரிக்கையாக இருந்தது.

ராகுல் காந்தி தெரிவித்தது போன்று நடைமுறை படுத்தி இருந்தாலும், ஏழை மக்களுக்கு சுமையாகவும், ஆடம்பரம் பொருட்கள் வாங்கும் வசதி படைத்தோருக்கு எளிமையாகவும் இருந்து இருக்கும், இப்படி பட்ட கோரிக்கையை குப்பையில் வீசப்பட்டு தற்பொழுது பிரதமர் மோடி அரசின் நடைமுறை படுத்தியுள்ள புதிய ஜி எஸ் டி சீர்திருத்தம், அணைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையாக அமைத்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.