அண்ணாமலை போட்டியிடும் தொகுதி confirm .. அமித்சா போட்ட உத்தரவு… முக்கிய பதவி அறிவிப்பு…

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், திருமாறன் ஜி உட்பட அனைத்து கட்சிகளும் மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக ஆகிய இவை அனைத்து கட்சிகளும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க வேண்டும் என விரும்பும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இது மட்டும் இல்லாமல் மேலும் பல கட்சிகள் கூட்டணி உள்ளே வரவேண்டும் என்பதே அமித்ஷாவின் விருப்பமாக இருந்தது, ஆனால் ஓ பன்னீர்செல்வம் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், இந்த நிலையில் டிடிவி தினகரன் டிசம்பர் மாதம் தங்களுடைய கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார், ஆனால் டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும்,

பாஜக அதற்கு இடம் கொடுக்காது என்று தகவல் வெளியாகிறது. மேலும் அதிமுக மீது தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் பிரேமலதா விஜயகாந்த், இருந்தாலும் தொடர்ந்து பாஜக பிரேமலதா விஜயகாந்த் இடம் பேசி வருவதால், இந்த கூட்டணிக்குள் நிச்சயம் தேமுதிக உள்ளே கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 2026 தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு அமித்ஷாவுக்கு சென்றதில், பெரும்பாலும் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் இருப்பதாகவும், அந்த வகையில் சரியான கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்களை சிறப்பாக கையாண்டால் திமுகவை வீழ்த்தி விடலாம் என்கின்ற கருத்து கணிப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் ஆக சென்று இருக்கிறது.

இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி மேலும் வலுப்பெறும் வகையில் சமீபத்தில் பேசிய அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமர்த்துவது நம்முடைய கடமை என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி யாரும் இனி அண்ணாமலையை விமர்சனம் செய்யக்கூடாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக அண்ணாமலை பிரச்சாரம் செய்யாமல் பாஜக ஓட்டு அதிமுகவுக்கு வராது என்பதையும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாஜக டெல்லி தலைமை விரைவில் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பை வெளியிட இருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பும்,

தென் மாநிலங்க மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர் பதவியும் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை தனக்கு தேர்தலில் போட்டியில் விருப்பமில்லை என்று பாஜக டெல்லி தலைமையிடம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் நிச்சயம் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புவதால் கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் உட்பட பல தலைவர்களுடன் டெல்லியில் அமித்ஷா சந்தித்து பேச இருக்கிறார்.

இதில் 40 தொகுதிக்கு குறைவில்லாமல் அதிமுகவிடமிருந்து பெற்று பாஜக போட்டியிட வேண்டும் என்றும், அனைத்து மாவட்டத்திலும் பாஜக போட்டியிட வேண்டும். குறிப்பாக கோவில் நகரங்களை குறிவைத்து சீட் உறுதி செய்ய வேண்டும். மிக விரைவிலேயே வேட்பாளரை உறுதி செய்து வேலையை தொடங்க வேண்டும் என அமித்ஷா மிகத் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.