சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு க ஸ்டாலினை ஒரே நாளில் காலை வாக்கிங் செல்லும் பொழுதும், மாலை முதல்வர் வீட்டிலும் சந்தித்து பேசி இருந்தார். ஓ பன்னீர்செல்வம் இதற்கு முன்பு ஒரு முறை முதல்வரின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் முதல்வருடன் ஆன ஓ பன்னீர்செல்வத்தின் சந்திப்புக்கான பின்னணி தகவல் என்ன என்பது தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் வெளியாகி இருக்கிறது. ஒரு பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் ஒரே நேரத்தில் சுமார் 10,000 கோடி அளவிற்கு projectகளை எடுத்துச் செய்யும் அளவிற்கு மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட அந்த பிரபல கட்டுமான நிறுவனம் சென்னையை ஒட்டி சுமார் 29 ஏக்கர் நிலங்களை வாங்கி அங்கே வீடு கட்டி விற்கும் வேலையை தொடங்கி இருக்கிறது. மேலும் அடையாறில் ஒரு ஓட்டலை வாங்கி மல்டி ஸ்டோரி பில்டிங் கட்டி வருகிறது அந்த கட்டுமான நிறுவனம். இந்த நிலையில் பல்லாயிரம் கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் அந்த கட்டுமான நிறுவனத்திற்கு போதுமான பணம் இல்லாததால், பல அரசியல் தலைவர்கள் அந்த கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து வருவது வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது திமுகவின் பல முக்கிய அமைச்சர்கள் அந்த கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தங்களுடைய பெரும்பாலான பணத்தை இந்த பிரபல கட்டுமான நிறுவனம் மட்டுமின்றி மற்றொரு கட்டுமான நிறுவனங்களிலும் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த ஒரு பிரபல நிறுவனத்தில் மட்டும் ஓ பன்னீர்செல்வம் சுமார் 3200 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது பணத்தை திருப்பி கேட்ட போது, அதற்கு அந்த கட்டுமான நிறுவனம் தற்பொழுது பல கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பண சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று, அந்த கட்டுமான நிறுவனம் ஓ பன்னீர்செல்வதிடம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வாக்கிங் செல்லும் நேரம் பார்த்து, அதே நேரத்தில் முதல்வரின் உதவியாளர் மூலம் அனுமதி பெற்று, ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் முதல்வர் வாக்கிங் செல்லும் போது நேரில் சந்தித்து இருக்கிறார், அதனைத் தொடர்ந்து முதல்வரின் வீட்டிற்கு சென்று அன்று மாலை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய 3200 கோடியை மீட்டு தர முதல்வரிடம உதவுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உடனே முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஓ பன்னீர்செல்வத்திற்கு உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ பன்னீர்செல்வம்திடம் கூட்டணி குறித்தும் முதல்வர் பேசியதாகவும், அதற்கு தான் தொடர்ந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்துவிட்டேன். அதனால் திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெரிவித்த ஓ பன்னீர் செல்வம்.
ஆனால் தாங்கள் செய்த இந்த உதவிக்கு, வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி அடையும் வகையில் தன்னுடைய நடவடிக்கை இருக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் முதல்வரிடம் உறுதி கொடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தன்னுடைய சொந்த பிரச்சனையை தீர்க்கவே முதல்வர் முக ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

