நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. தலையே சுத்துது… மாதம் வருமானம் மட்டுமே இவ்வளவா.?

0
Follow on Google News

ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் மிக விரைவிலேயே முன்னணி நட்சத்திர நடிகையாக மாறினார். அதேபோல் ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பணக்கார நடிகைகளில் ஒருவர் நயன்தாரா என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மட்டுமின்றி வெவ்வேறு பிசினஸ்கள் மூலமாகவும் மாதந்தோறும் கோடிக்கணக்கில் நயன்தாரா வருமானம் ஈட்டி வருகிறார்.

அவர் முதலீடு செய்துள்ள சொத்துக்கள், வாங்கிய விலை உயர்ந்த வாகனங்கள் அணிகலன்கள், ஆபரணங்கள் பிராண்டட் ஆடைகள் பங்குகள் மற்றும் வணிக முயற்சிகள் என பல வகைகளில், செல்வச் செழிப்பான பொருளாதார நிலையில் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண நடிகையாக தனது கேரியரை ஆரம்பித்து, சுய முன்னேற்றத்தில் ஒரு பெண் தொழிலதிபராக நடிகை நயன்தாரா மாறி ஜெயித்திருக்கிறார். இதில் பல பெண்களுக்கு அவர் முன் உதாரணமாகவும் இருக்கிறார்.

நடிகை நயன்தாராவின் விலை உயர்ந்த சொத்துக்கள் குறித்த தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். நடிகை நயன்தாராவுக்கு சென்னை மற்றும் கேரளா மும்பை ஆகிய நகரங்களில் சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் மொத்த மதிப்பு 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஹைதராபாத்தில் மட்டும் நயன்தாராவுக்கு சொந்தமான இரண்டு அப்பார்ட்மெண்ட்கள் உள்ளன. இதன் மதிப்பு 30 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவிலேயே சொந்தமாக பிரைவேட் ஜெட் எனப்படும் குட்டி விமானம் பயன்படுத்தும் சில பிரபலங்களில் நடிகை நயன்தாராவும் ஒருவர். நாட்டின் எந்த பகுதிக்கு செல்வதாக இருந்தாலும் தனது தனிப்பட்ட ஜெட்டில் தான் பயணிக்க அவர் விரும்புகிறார். இந்த பிரைவேட் ஜெட்டின் மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இந்த விமானத்தில் அடிக்கடி தனது கணவர், குழந்தைகளுடன் நயன்தாரா பறக்கிறார். அவரது வலைதள பக்கங்களில் அடிக்கடி அந்த விமான பயண புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

நடிகை நயன்தாராவிடம் பல பிராண்டட் சொகுசு கார்கள் இருக்கின்றன. அவர் ஒரு சிறந்த கார் கலெக்சனை தனது சொந்த வாகனங்கள் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார் அதன்படி பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, போஃர்டு என்டெவர் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மெர்சிடிஸ் – மாய்பக் ஜிஎல்எஸ் 600 போன்ற வாகனங்கள் அவரிடம் இருக்கின்றன. இவை எல்லாமே சொகுசு காரர்களாக இருந்தாலும் இந்த பட்டியலில் மிகவும் விலை உயர்ந்தது மெர்சிடிஸ் மாய்பக் ஜி எல் எஸ் 600 கார்தான். இதன் மதிப்பு மட்டுமே 3 கோடி ரூபாயை தாண்டும் என்று சொல்லப்படுகிறது.

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பதன் மூலம் பெரிய அளவில் வருமானம் பெற்று வருகிறார். அதுதவிர பல விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். சோப் விளம்பரங்கள் மற்றும் ஆடை அணிகலன்கள் நகை கடைகள் விளம்பரங்கள் என பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். இதுதவிர 9 ஸ்கின் என்ற சரும பராமரிப்பு நிறுவனத்தை நயன்தாரா நடத்தி வருகிறார். அதேபோல் பேபி 9 என்ற சானிட்டரி பேட் நிறுவனத்தையும் அவர் நடத்துகிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் மூலம் நயன்தாராவுக்கு மாதந்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. பிரபல நடிகையாக ஜொலித்துவரும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனோடு இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். திரைப்பட துறையிலும் தொழிலிலும் முன்னணியில் இருக்கும் நடிகை நயன்தாராவின் இப்போதைய சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது தமிழ் தெலுங்கு மட்டுமின்றி இந்தி படங்களிலும் நயன்தாரா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.