சஞ்சய்யை துரத்தும் அம்மா… அப்பா விஜய் அந்த ஒரு வார்த்தை… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்

0
Follow on Google News

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சஞ்சய் பகிர்ந்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து கேரளா எல்லைப் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு சென்றிருக்கிறார் சஞ்சய். வீட்டில், சென்னையில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டு, தன்னை தேட வேண்டாம் என்றும் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்.

ஆனால், அங்கு சென்ற பிறகு நடந்த ஒரு சம்பவம்தான் சஞ்சய்யை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே புலிகள் சரணாலயம் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் சஞ்சய்யின் அம்மா அவருக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் சஞ்சய் அந்த அழைப்பை எடுக்கவில்லை. உடனே அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

அதுவும் போனில் மலையாளத்தில் பிசி டோன் கேட்டதால், சஞ்சய் கேரளாவில் இருப்பது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதற்குப் பிறகுதான் சஞ்சய் பயந்து போயிருக்கிறார். சென்னைக்கு திரும்பும் வரை செல்போனையே தொடாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த பயணத்தின்போது ஒரு நாள் சுமார் 100 மீட்டர் தூரத்தில் சிறுத்தையையும் பார்த்திருக்கிறார்கள்.

சிறுத்தையை பார்த்ததும் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் சஞ்சய் கூறியிருக்கிறார். இப்படி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மா, அப்பா இருவருக்கும் கவலையை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், இயற்கையை ரசிப்பதற்காக இதுபோன்ற பயணங்களை தான் விரும்புவதாக சஞ்சய் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் விஜய்யின் மகன் என்ற மிகப்பெரிய அடையாளம்… இன்னொரு பக்கம் தனது சொந்த முயற்சியில் இயக்குநராக வேண்டும் என்ற கனவு… அதற்கு நடுவில், அம்மாவின் கண்காணிப்பை தாண்டி கேரளா வரை சென்று சிறுத்தையை நேருக்கு நேர் பார்த்த அனுபவம் என, ஜேசன் சஞ்சய்யின் வாழ்க்கையில் இருக்கும் பல சுவாரஸ்யமான பக்கங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், சஞ்சய்யின் சமீபத்திய பேட்டிகளில் அதிகம் பேசப்பட்ட விஷயம் அவருடைய பெற்றோர் பற்றிய தகவல்கள்தான்.தனது அம்மா சங்கீதா குறித்து பேசிய சஞ்சய், வீட்டில் நடப்பதை மிகக் கூர்மையாக கவனிப்பவர் என்றும், தன்னை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடும் அளவுக்கு அவரது அம்மாவின் கண்காணிப்பு இருப்பதாகவும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தனது அம்மாதான் தனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதேபோல், தனது அப்பா விஜய் குறித்து சஞ்சய் கூறிய விஷயம் இன்னும் சுவாரஸ்யமானது. சினிமாவில் விஜய்யின் மகன் என்ற அடையாளத்துடன் மட்டும் தான் இருக்கக்கூடாது என்பதுதான் தனது அப்பா தனக்கு கொடுத்த மிகப்பெரிய அறிவுரை என்று சஞ்சய் தெரிவித்துள்ளார். “உனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்” என்பதுதான் விஜய் தனக்கு தொடர்ந்து சொல்லி வந்ததாகவும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் அப்பாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளாமல், தானாக அனுபவித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகவும் சஞ்சய் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சஞ்சய்யின் முதல் சம்பளம் பற்றிய தகவலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு திரையரங்கில் கேஷியராக வேலை பார்த்ததாகவும், அங்கு பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதால், ரசிகர்கள் யாரும் வராத நேரங்களில் தானே உட்கார்ந்து படங்களை பார்த்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.