தவெக கூட்டணியில் அங்கம் வகித்து , தவெக அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களும் பெற்று, ஒரு ராஜசபா எம்பியும் தவெக விடம் பெற்ற காங்கிரஸ் கட்சி, வழக்கம் போல் தன்னுடைய சுயரூபத்தை தவெக விடம் காட்ட தொடங்கி இருக்கிறது. ஆனால் இதை மிக சீரியசாக எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியை கை கழுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அந்த காட்சிகள் அனைத்தும் அந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்து தங்கள் அடையாளத்தை இழந்து வருகிறது, மேலும் இந்தியாவில் ஒரு சில மாநிலத்தை தவிர்த்து காங்கிரஸ் கட்சி தன இருந்த இடம் தெரியாமல் காணாமல் கரைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்கத்தில் காங்கிரஸ் கட்சியால் தனித்து நின்று ஒரு கவுன்சிலர் தொகுதி கூட வெற்றி பெறாத நிலை தான் உண்டு.

மேலும் ஊருக்கு காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கூட இல்லாத நிலையில் தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமையும் கூட, அப்படி இருக்கையில் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் திமுக மீது சவாரி செய்து தன்னுடைய இருப்பை காட்டி கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி , தேர்தல் முடிந்ததும் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல, நிறத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ளும் பஞ்சோந்தி போல திமுகவில் இருந்து தவெக வுக்கு தாவியது காங்கிரஸ் கட்சி.
ஆனால் தமிழகத்தில் ஒரு நாலு பேர் கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் கொடுத்தது மட்டுமில்லாமல், ஒரு ராஜசபா எம்பியும் கொடுத்தார் முதல்வர் விஜய், அனால் அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல், வழக்கம் போல் காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து தவெக வினர் மனம் நோகும்படி பேசி வருவது முதல்வர் விஜய்யை கோபம் அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தவெக அமைச்சர்கள் அடுத்த பிரதமர் விஜய் தான் என பேசி வருவது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தயவில் தான் தவெக ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் தயவில் தான் அமைச்சர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என திமிராக மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார். மேலும் அமைச்சர்கள் அப்படி பேசுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.
அதுமட்டும்மில்லாமல் எம்பிக்கள் எப்போது தவெக வுக்கு இருக்கிறார்களோ அப்போது தான் அவர்கள் இந்தி கூட்டணியில் இடம் பெறுவர்கள் என்று, தவெக வுக்கு ஒரு எம்பி கூட இல்லை என மறைமுகமாக சாடி இருந்தார் மாணிக்கம் தாகூர், இது, காலாவதியான காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த தவெக வுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என மக்கள் தலையில் அடித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது ஜெயலலிதா பார்முலாவை கையில் எடுத்துள்ள முதல்வர் விஜய், கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் – பாஜக இரண்டு கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாமல், தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டு மோடியா – லேடியா என தீவிரம் பிரச்சாரத்தின் மூலம் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய ஆளுமையை நிரூபித்தார் ஜெயலலிதா.
அதே போன்று வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல், முதல்வர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்துளளது தவெக என்றும், அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை கை கழுவிவிட்டு தனியாக பாஜகவை எதிர்த்து வரும் 2029 நாடளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார் முதல்வர் விஜய் என்கிற தகவல் காங்கிரஸ் தலைமையை கதி கலங்க செய்துள்ளதாம்.

