கடந்த திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு முதல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு அந்த பகுதியில் உள்ள சுமார் 13 கிராம மக்கள் 1100 நாட்கள் கடந்து போராட்டம் நடத்தி வந்தனர், மக்கள் போராட்டத்திற்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை அப்போதைய திமுக அரசு. ஆனால் சுமார் 1100 நாட்களை கடந்து நடந்து வந்த பரந்தூர் விமான நிலைய போராட்டத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் கலந்து கொண்ட விஜய்,
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிராக போராடி வந்த சுமார் 13 கிராம மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், மேலும் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய பின்பு முதல் முதலில் விஜய் கலந்து கொண்ட களப்போராட்டம் என்பதும் பரந்தூர் விமான நிலைய போராட்டம் தான். இதனை தொடர்ந்து சொன்னதை செய்வோம், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்,

என்பதற்கு முனுத்தரணமாக முதல்வர் விஜய் சட்டசபையில் பரந்தூர் விமான நிலையம் திட்டடம் ரத்து செய்யப்படும் என அறிவித்து பரந்தூர் பகுதியை சுற்றி இருக்கும் சுமார் 13 கிராம மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கொடுத்து இருக்கிறார், இந்நிலையில் முதல்வர் விஜய் சட்டசபையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்த உடனே சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கதறல் அதிகரித்தது.
மேலும் பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு திமுகவினரின் கதறலுக்கு பின்னணி காரணம் என்ன என்பது குறித்த முழு விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது.குறிப்பாக பல கோடி வாரி அள்ளலாம் என்கிற திமுகவினரின் கனவில் முதல்வர் விஜய் மண்ணை அள்ளி போட்டு விட்டார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் உறுதி செய்து முறையான அறிவிப்பு வெளியாகும் முன்பே, விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தை சுற்றி கடந்த திமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள், குறிப்பாக திமுக முதல் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பினாமி பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
எப்படியும் பரந்தூர் விமான நிலையம் வந்துவிடும், நாம் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பலமடங்கு அதிகரித்து, பலகோடி குவித்து விடலாம் என்கிற கனவில் மிதந்து கொண்டிருந்திருக்கிறார்கள் திமுக மாஜி அமைச்சர்கள், ஆனால் அவர்களின் கனவில் இடியை இறக்குவது போன்று அமைந்து விட்டது முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட இருக்கிறது என்கிற அறிவிப்பு.
இதில் மிக பெரிய கேலி கூத்து என்ன வென்றால், பரந்தூர் விமான நிலையம் முறையான அறிவிப்பு வெளியாகும் முன்பு, அங்கே இருக்கும் விவசாயிகளிடம், அப்போதைய விலையை விட இரண்டு மடங்கு , மூன்று மடங்கு கொடுத்து அந்த நிலங்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள் திமுகவினர், ஆனால் பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான பின்பு தான் அங்கிருந்த விவசாயிகள் தங்கள் நிலத்தை இதற்காக தான் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகம் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்களா.? என ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
ஆனால் தற்பொழுது பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிட்டபட்ட நிலையில், இனி அங்கே திமுகவினர் வாங்கிய இடத்தை இனி வாங்கிய விலைக்கு கூட யாரும் வாங்க மாட்டார்களே என்கிற ஏமாற்றம் தான், பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என கூச்சலிடுகிறார்கள் திமுக மாஜி அமைச்சர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் என கூறப்படுகிறது.

