கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா – இந்தியா இடையேயான நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இந்திய பிரதமர் மோடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்ற நட்பைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் போருக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடும் ட்ரம்ப், இந்தியா மீது வரிகள் விதித்தும், பொதுவெளியில் இந்தியா குறித்து மோசமாக விமர்சித்தும் வருகிறார்.
இந்நிலையில் ரசியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் பணத்தில் தான் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நடத்துவதாக குற்றம்சாட்டி, உடனே இந்தியா ரசியாவிடம் இருந்து என்னை வாங்குவதை நிறுத்த வேண்டும் , இல்லை என்றால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார், இருந்தும் இந்தியா செவி சாய்க்காததால், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா மீது அமெரிக்க 50 சதவிகித வரி விதிக்க ரசியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது காரணம் இல்லை, தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவருக்கு இடையில் நடந்த அந்த ஒரு தொலைபேசி உரையாடல் தான் என்றும், குறிப்பாக எவ்வளவோ ட்ரம்ப் கேட்டு கொண்டும் பிரதமர் மோடி பிடிவாதமாக இருந்ததால் தான், கோபத்தில் இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் வரி விதித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியா சில விஷயங்களுக்கு ஒத்துக் கொள்ளாததே காரணம் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் பெருமை பேசிக் கொண்டிருந்தபோது அதை பாகிஸ்தான் ஆமோதித்து அமைதியாக இருந்தது. ஆனால் இந்தியா தொடர்ந்து ட்ரம்ப்பின் கருத்துகளை மறுத்து வந்தது. இது ட்ரம்ப்பை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தன்னை பரிந்துரைக்க வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் ட்ரம்ப் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பாகிஸ்தான் சம்மதித்து ட்ரம்ப் பெயரை சிபாரிசு செய்த நிலையில், இந்தியாவிடம் கேட்டபோது பிரதமர் மோடி மறுத்துவிட்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நீங்களும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று அடி மட்டத்துக்கு இறக்கி பிரதமர் மோடியிடம் கெஞ்சி இருக்கிறார் ட்ரம்ப் . அதற்கு மோடி மறுத்துவிட்டார்.
மேலும் இந்தியா – பாக்கிஸ்தான் போர் ட்ரம்ப் தெரிவித்து தான் போர் நின்றது என்பதை இந்தியா அதனை ஏற்கவில்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போரை நிறுத்தினோம் என்று மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது. இது டிரம்பை டென்ஷனாக்கி உள்ளது. அந்த கோபத்திலேயே ட்ரம்ப் இப்படி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெறும் விருதுக்காக ஒரு நட்பு நாட்டை ட்ரம்ப் இப்படி நடத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாடு இந்திய தலைநகரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் இந்தியாவுக்கு வரும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் அதிபராக இருக்கிறேன். ஆனால் இந்தியா மட்டும் நான் சொல்வதை எதையும் கேட்கவில்லையே என நொந்துபோயுள்ள டிரம்ப் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உலகுக்கே தண்ணி கட்டிய அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தற்பொழுது தண்ணி காட்டி கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.

