கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்பார்த்த மெகா வெற்றியை பெற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அப்போது பிரதமர் மாற்றம் ஏற்படலாம் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் மூன்றாவது முறையாக கூட்டணி கட்சித் துணையுடன் மோடி பிரதமராக பதவி ஏற்றார். மீண்டும் நான்காவது முறையாக வருகின்ற 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மோடியே பிரதமராக பதவி ஏற்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சற்று சரிவை சந்தித்து நிலையில், இதற்கு முன்பு பெரிதாக பாஜக கட்சிக்குள் ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லாமல் இருந்து வந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு ஆர்எஸ்எஸ் தலையீடு மிகப்பெரிய அளவில் பாஜக உள்ளே அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், இம்மாத இறுதியில் அவர் தன்னுடைய பதவியில் இருந்து விலகுகிறார் ஜே.பி.நட்டா. இம்முறை ஆர் எஸ் எஸ் உடன் இணக்கமாக இருக்கக்கூடிய ஒரு நபரை தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் உறுதியாக இருந்த நிலையில் ஆர் எஸ் எஸ் க்கும் , மோடி அமித்ஷா இடையில் நடந்த பேச்சுவார்த்தை தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது,
அந்த வகையில் பலருடைய பெயர்கள் தேசிய தலைவர் பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் தற்பொழுது தேசிய தலைவராக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங் 13 வயதில் ஆர் எஸ் எஸ் இல் பயணித்து, தன் பின்பு ஏ பி வி பி யில் தன்னுடைய சேவையை தொடர்ந்தவர்,
பாஜக தொடங்குவதற்கு முன்பு ஜன சங்க கட்சி மாவட்ட தலைவராக 1975 ஆம் ஆண்டு இருந்தவர். எமர்ஜென்சி காலகட்டங்களில் இரண்டு வருடம் சிறையில் இருந்த ராஜ்நாத் சிங், அப்போது அவருடைய தாயார் இறுதிச் சடங்கில் கூட பங்கு பெற முடியாமல் சிறையில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். உத்தரப்பிரதேசத்தில் முதல்வராகவும், தேசிய தலைவராக இரண்டு முறையும், வாஜ்பாய் மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும் இருந்து வரும் ராஜநாத் சிங், 2014-ல் அத்வானியின் எதிர்ப்பை மீறி மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவர் அப்போது தேசிய பாஜக தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்.
அந்த வகையில் மோடிக்கு எப்படி ஒரு கண் அமித்ஷாவோ அதேபோன்று மற்றொரு கண் ராஜ்நாத் சிங். அந்த வகையில் மோடிக்கும் ஆர்எஸ்எஸ் இருவருக்கும் இணக்கமாக இருக்கக்கூடிய ராஜ்நாத் சிங் தற்பொழுது தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த நிலையில் ராஜ்நாத் சிங் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதால் அவருடைய அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய இருக்கிறார்.
இதனால் அமைச்சரவையிலும் மாற்றம் வர இருக்கிறது.இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடந்த காலங்களில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, மோடி ஆகியோர் வகித்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.