தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் அவருடைய பதவி காலம் முடிவடைந்தது தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் மாற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து புதிய தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்த போது, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் அண்ணாமலையை பாஜக தேசிய அளவில் பயன்படுத்தும் என்று உறுதி கொடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து மதுரையில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். அப்போது மதுரையில் நடந்த நிகழ்வில் அமித்ஷா அண்ணாமலை பெயரை குறிப்பிட்டதும் காட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றதை பார்த்து பூரித்துப் போன அமித்ஷா, டெல்லி சென்றதும் இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடியிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அதில், தமிழக அரசியலில் அண்ணாமலைக்கு பாஜக தேசிய தலைமை கொடுக்கும் முக்கியத்துவம், ஒவ்வொரு பாஜக தொண்டர்களுக்கும் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் ஆக தமிழகத்தில் இருக்கும் பாஜகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உணர்வார்கள் என்பதற்கான சான்று தான் அண்ணாமலை பெயரை குறிப்பிட்டதும், அந்த அரங்கில் இருந்த நிர்வாகிகளும் பாஜக தொண்டர்களும் கரகோஷம் எழுப்பி உற்சாகமாக உற்சாகமடைந்தது என்பதை தமிழகத்தில் இருந்து டெல்லி திரும்பியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் நடந்த இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி இடம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அல்லது தேசிய இளைஞர் அணி தலைவர் கொடுக்கப்படலாம் என்று டெல்லி பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது, குறிப்பாக அமித்ஷா அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி கொடுத்து தென் மாநிலங்களின் பொறுப்பாளராக நியமிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் டெல்லி வட்டாரங்களில் தகவல் வெளியானது.
ஆனால் பாஜகவின் தேசிய தலைவர் நியமனம் காலதாமதமானதால் தேசிய நிர்வாக பட்டியலும் காலதாமதம் ஆனது. அஇந்த நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங், தேசிய தலைவராக நியமிக்கப்பட்டால் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வார் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் மூன்று அமைச்சர்கள் மாற்றம் செய்ய இருப்பதால், தற்பொழுது வெளிநாடு பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் இருப்பது உறுதியாக இருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள். அந்த வகையில் அண்ணாமலைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது.
குறிப்பாக அமித்ஷா மோடி இவர்கள் இருவரிடமே நற்பெயரைப் பெற்றுள்ள அண்ணாமலையை தங்கள் அமைச்சரவைக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவருமே விருப்பம் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மத்திய உள்துறை இணை அமைச்சராக அண்ணாமலை பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அண்ணாமலைக்கு இரண்டு ஆப்ஷன்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பாஜகவின் தேசிய தலைவர் பொறுப்பு, அப்படி இல்லை என்றால் அமைச்சரவையில் இணை உள்துறை அமைச்சராக வழங்கப்படுவதற்கான இரண்டு ஆப்சன்களில் ஒன்றை அமித்ஷா அண்ணாமலைக்கு கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.