பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு கடந்த மார்ச் மாதமே வெளியாக இருந்த நிலையில் அடுத்தடுத்து பகல்ஹாம் தாக்குதல், ஏர் இந்தியா விமான விபத்து என தொடர்ந்து பல விவரங்களில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கவனம் சென்றதால், பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் ஆனது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவராக தற்போது இருக்கும் ஜே பி நட்டா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் இல்லாமலே பாஜக வெற்றி பெறும் என்று பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
மேலும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக முழுமையான வெற்றியை பெறாமல் போனதற்கு காரணம் அமித்ஷாவுக்கும் யோகிக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு தான் எனக் கூறப்படுகிறது. அதாவது சுமார் 30 தொகுதிகளில் பழைய வேட்பாளர்களை மாற்றி புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என யோகி தெரிவித்ததை அமித்ஷா ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் தான் சுமார் 30 தொகுதிகளை பாஜக உத்தரப்பிரதேசத்தில் இலக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின்பு தற்பொழுது யோகி ஆதித்யநாத்துக்கும் அமித்ஷாவுக்கு இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் உடன் இணக்கமாக இருக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் ஆர் எஸ் எஸ் பின்புலம் கொண்டவர்கள் மட்டுமே தற்பொழுது பாஜக தேசிய தலைவர் பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்கின்ற தகவல் தற்பொழுது டெல்லியில் இருந்து வெளியாகி இருக்கிறது. அதில் தற்பொழுது மத்திய அமைச்சராக இருக்கும் 56 வயதான தர்மேந்திர பிரதான் இடம் பெற்றுள்ளதாகவும் இவர் தன்னுடைய மாணவப் பருவத்திலேயே ஏடிவிபி இயக்கத்தில் பயணித்து, 2004 காலகட்டத்தில் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவராக பயணித்தவர்.
மேலும் ஒரிசாவில் நவீன் பட்நாயக்கை வீழ்த்த காரணமாக இருந்தவர் தர்மேந்திர பிரதாப். அது மட்டும் அல்லாமல் 2024 இல் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த மாநிலங்களில் மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா இந்த இரண்டு மாநிலங்கள் தான் பாஜகவிற்கு 2024 இல் உயிர் கொடுத்தது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பூரி ஜெகநாதன் பாஜகவை கைவிடவில்லை என்றும் பேசப்பட்டது.
அப்படி மத்திய பிரதேசத்திலையும் ஒடிசாவில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று 2024 இல் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது தர்மேந்திர பிரதான். அந்த வகையில் பாஜக தேசிய தலைவர்கள் பட்டியலில் தற்பொழுது தர்மேந்திர பிரதான் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது . அவரை தொடர்ந்து மனோகர் லால் கட்டர் சுமார் 17 வருடங்கள் முழு நேர ஆர் எஸ் எஸ் ஊழியர் ஆன இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து சிவராஜ் சிங் சௌகான் பாஜகவின் மிக மூத்த தலைவர்களான இவர் தன்னுடைய 13 வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து பயணித்தவர், 16 வருடம் மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர் குறிப்பாக மத்திய பிரதேசத்தில் மகளிர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யக்கூடிய வகையில் அங்கே மகளிர்களுக்கான பல நல திட்டங்களை சிவராஜ் சிங் சவ்கான் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரும் பாஜகவின் தேசிய தலைவர் பட்டியலில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து முன்னாள் பாஜகவின் தேசிய தலைவர், தற்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இடம்பெற்றிருக்கிறார், இவரும் தன்னுடைய 13 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தவர், அடுத்தடுத்து பாஜகவில் பல பொறுப்புகளை வகித்து வாஜ்பாய் மோடி இருவருடைய அமைச்சரவையில் இடம் பிடித்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேசிய தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்ததை ஆர்எஸ்எஸ் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தேசிய தலைவர் பரிசீலனை பட்டியலில் ஒரு சிலர் பெயர் அடிபடுவதாக கூறப்படுவது உண்மை இல்லை என டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது. ஆனால் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறுள்ளதை உறுதி செய்கிறது டெல்லி வட்டாரம்.

