முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது. குறிப்பாக திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான கனிமொழியே கண்டிக்கும் வகையில் அமைந்து இருந்தது அமைச்சர் பொன்முடியின் சைவம் வைணவம் குறித்த அநாகரிகமான அந்த பேச்சு.
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் முதல்வர் முக ஸ்டாலின், மேலும் பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோனது, குறிப்பாக பொன்முடி பேசிய பேச்சுக்கு தொடர்ந்து, கட்சி பொறுப்பிலும், அமைச்சர் பொறுப்பிலும் வைத்து இருந்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மிக பெரிய சரிவை ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்து தான், கட்சி பதவியில் இருந்து நீக்கியும், அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றியும் ஓரம் கட்டினார் முதல்வர் முக ஸ்டாலின் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.இதனை தொடர்ந்து பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடிக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக் கூறி, அந்த புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியைத்தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினாா் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகாா்கள் மீது காவல் துறையினா், புலன் விசாரணை செய்யத் தயங்கினால், விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் என நீதிபதி எச்சரித்தாா்.
மேலும், பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவா் ஏன் இதுபோன்று பேச வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி. அமைச்சராக இருந்தவா் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நல்ல விஷயங்களை பேசியிருக்கலாம் என கடுமையாக எச்சரித்து இருந்தார் நீதிபதி.
இந்த நிலையில் சைவம் – வைணவம் குறித்து பொன்முடி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக் கூறி, அந்த புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது என அரசு தரப்பு வழங்கறிஞர் தெரித்ததற்கு,
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் மீது காவல் துறையினா், புலன் விசாரணை செய்யத் தயங்கினால், விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் என நீதிபதி எச்சரித்தது இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. அந்த வகையில் இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

