தனி தீவில் தத்தளித்த 15 தமிழர்கள்… கடவுள் போல் காப்பாற்றிய நயினார் நாகேந்திரன்… மிஸ்சர் சாப்பிடும் திமுக… 

0
Follow on Google News

ஈரான் – இஸ்ரேல் இடையில் நடந்து வரும் போரில் இடையே, தமிழ்கத்தில் தென் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி வேலைக்காக சென்றவர்கள், இரானிய மீன்பிடி படகில் மீன் பிடிக்க துபாய் வழியாக ஈரானுக்கு சென்றனர், அப்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்த போரின் காரணமாக ஈரானில் உள்ள கிஷ் தீவு, அசலுயே மற்றும் ஷிருயே போன்ற பகுதிகளில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

போர் சூழல் காரணமாக ஈரானில் சிக்கிய இருந்த 15 தமிழக மீனவர்கள், அங்கே வேலையின்றி, உன்ன உணவு இன்றி, செலவுக்கு பணம் கூட இல்லாமல் தவித்து வந்த வந்தனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஈரானில் சிக்கி 15 தமிழக மீனவர்கள் தவித்து வரும் தகவல் அறிந்து, உடனே அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான வேளைகளில் முழு வீச்சில் இறங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஈரானில் உன்ன உணவின்றி, வேலையின்றி சிக்கி தவித்து வரும் 15 தமிழக மீனவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கடந்த ஜூன் 28ம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார் நயினார் நாகேந்திரன்.

மேலும் ஈரான்னில் சிக்கி தவித்து வந்த தமிழக மீனவர்கள் குறித்து முழு தகவல்களையும் கடிதம் மூலம் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்று இருந்தார் நயினார் நாகேந்திரன். இதனை தொடர்ந்து பல நாட்களாக ஈரான் – இஸ்ரேல் போரினால் சிக்கி தவித்து வந்த 15 தமிழர்களை அடையாளம் கண்டு பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியது மத்திய பாஜக அரசு.

இதனை தொடர்ந்து ஈரானில் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் குறித்து தகவலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் மத்திய அரசு கேட்டதை, தொடர்ந்து, ஈரான் னில் சிக்கி தவித்து வந்த மீனவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்கள் குறித்த தகவலை சேகரித்து மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு சென்றார் நயினார் நாகேந்திரன். இதனை தொடர்ந்து உடனடியாக களத்தில் இறக்கிய வெளியுறவு துறை அமைச்சகம், தமிழர்கள் சிக்கி தவித்து வந்த ஈரானில் உள்ள தீவுக்கு இந்தியத் தூதரக அதிகாரிகளை அனுப்பி வைத்தது.

அங்கே தீவுகளில் சிக்கி தவித்து வந்த தமிழக மீனவர்களை அடையாளம் கண்ட இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களை பத்திரமாக மீட்டு  கப்பல் மூலம் துபாய் அழைத்து சென்றனர் , அங்கிருந்து விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்,இந்நிலையில்  உன்ன உணவின்றி, வேலையின்றி, கையில் பணமின்றி ஈரானில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 15 பேர் பாதுகாப்பாக தாயகம் திரும்ப காரணமாக இருந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும்  நிலையில், இரானில் சிக்கி தவித்து வந்த 15 தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் திமுக அரசு மிக்சர் சாப்பிட்டு கொண்டிருக்கிறதா என்றும் பலரும் தங்கள் கோபத்தை திமுக அரசுக்கு எதிராக பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தற்பொழுது 15 தமிழர்களை பத்திரமாக மத்திய பாஜக அரசு மீட்டு வந்தது போன்று, மேலும் ஈரான் னில் சிக்கி இருக்கும் தமிழக மீனவர்களை அடையாளம் கண்டு மீட்டு வருவதற்கான பணிகளில் தீவிரமாக பதிய பாஜக அரசு இறங்கியுள்ள நிலையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது சுமார் 99 சதவிகிதம்  குறைந்துள்ளதற்கு காரணம் மத்திய பாஜக அரசின் வெளியுறவு ராஜதந்திரம் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.