நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 106 நாட்கள் வீட்டில் இருந்தார். அவருக்கு வாரத்திற்கு ₹2 லட்சம் ஊதியமாகப் பேசப்பட்ட நிலையில், 15 வாரங்களுக்கு ₹30 லட்சம் ஊதியம் கிடைத்திருக்கலாம். அந்தப் பணத்தைக்கொண்டு ஜோவிகா “மிஸ்ஸஸ் & மிஸ்டர்” என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜோவிகா தாயார் வனிதா விஜயகுமார் மற்றும் வனிதா விஜயகுமார் முன்னாள் காதலன் ராபர்ட் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மிஸ்ஸஸ் & மிஸ்டர்” படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் வனிதா விஜயகுமார் ஓப்பனாக பேசிய பேச்சு தான் ஹாட் டாப்பிக், பிரேக்கப் செய்த பிறகு ராபர்ட் உடன் கணவன் மனைவியாக ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை என தெரிவித்த ராபர்ட் மாஸ்டர். மறந்து விட்டோம் பிரிந்து விட்டோம் அவரவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.

ஆனாலும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். பிரேக்கப் செய்து பிரிந்த பின் நயன்தாரா சிம்பு இருவரும் சேர்ந்து நடித்தார்கள் அதன்பின் ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்திருக்கிறோம் என தெரிவித்த வனிதா விஜயகுமார், மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் எங்களுக்குள் சண்டை அடிக்கடி வரும் ஆனால் மறுநாள் நாங்கள் சரியாகிவிடுவோம் எங்களுடன் வேலை பார்த்தவர்கள் தான் மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என பேசிய வனிதா விஜயகுமார்.
மேலும் நானும் ராபர்ட் மாஸ்டரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால், அந்த நேரம் அது அமையாமல் போய்விட்டது. ஏனென்றால், அவருக்கு அந்த நேரம் விவகாரத்து ஆகவில்லை. இதனால், திருமணம் நடக்காமல் போய்விட்டது. ஆனால், எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும் என தெரிவித்த வனிதா.
மேலும் இந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக நடித்தபோது, பல நேரத்தில் எமோஷனலாக பல விஷயங்கள் நினைத்து கண்கலங்கினோம். படத்தில் தாலி கட்டுவது போல, வரும் காட்சியில், ராபர்ட் உண்மையிலேயே மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார். இதனால், ஒவ்வொரு முறையும் அவருடைய கை நடுங்கியது. இப்படி பதற்றத்திலே 40 முறைக்கு பிறகுதான் டேக்கே ஓகே ஆனது என பேசிய வனிதா
மேலும் தன்னுடைய அடுத்த திருமணம் குறித்தும் பேசினார், அதில் அடுத்து ஏன் நான் கல்யாணம் பண்ணவில்லை என்பதற்கான காரணத்தை வனிதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .ஒரு தடவை எனக்கு கல்யாணம் ஆனது. சந்தர்ப்பம் சூழ்நிலை விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு இரண்டு பேரும் ஒன்றாக இல்லை. அடுத்து உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் யாரும் நினைக்க மாட்டார்கள்.
லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்கள் அல்லது ஒரு டேட்டிங் வாழ்க்கையில் போக வேண்டும் என நினைப்பார்கள். கல்யாணம் என்பது ஒரு பெரிய கமிட்மெண்ட் .கண்டிப்பாக சுதந்திரம் என்பது இருக்கவே இருக்காது. என்னதான் நாம் ஒரு நட்பாக பழகி ஒரு பார்ட்னருடன் பழகினாலும் கடைசியில் திருமணம் என்பது திருமணம் தான். கண்டிப்பாக சில கண்டிஷன்ஸ் என்பது இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் நான் இல்லை. எனக்கு இந்த டைம் பாஸுக்கு லவ் பண்ணுவது ,டைம் பாஸுக்கு டேட்டிங் பண்ணுவது. இந்த மைண்ட் செட் எனக்கு கிடையாது என வனிதா தெரிவித்துள்ளார்.

