பாதிரியார்களை நேரில் சந்தித்த பேராசிரியர்.! பாஜக- கிருஸ்துவர்கள் இடையே உரையாடலுக்கு தயாராக வலியுறுத்தல்.!

0
Follow on Google News

இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி கிருஸ்துவ தேவாலயம் சென்ற பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் அங்கே இருக்கும் பாதிரியார்களை சந்தித்து அரசியல் குறித்து கலந்துரையாடினர், வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் பாஜகவில் பலர் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர்கள் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்,அங்கே கிருஸ்துவர்கள் பாஜகவை ஏற்று கொள்வதில் தயக்கம் இல்லாத போது, தமிழகத்தில் மட்டும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான கட்சி பாஜக என்று பொய்யான பிரச்சாரம் செய்து வருவதால், தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு பாஜக தங்களுக்கு எதிரான கட்சி என்கிற மனநிலை உருவகுவதாக தெரிவித்த பேராசிரியர்.

மேலும் தொடர்ந்து பாதிரியர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை சமூகம் மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக போன்ற காட்சிகள் மீது தொடர்ந்து முரண்பட்டால் அது அந்த சமுதாய வளர்ச்சிக்கு உதவாது, அதே போன்று சுமார் ஒரு கோடி வரை தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை சமூக மக்களிடம் முரண்பாட்டை வளர்த்து கொண்டே பயணிக்க முடியாது, ஆகையால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு பொறுப்பு இருக்கிறது என தெரிவித்த பேராசிரியர்.

நமக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையில் உரையாடல் இருக்க வேண்டும், வாக்கு வங்கி அரசியலுக்கு சிறுபாண்மை சமூகம் பலியாகி விட கூடாது என்றும்,மேலும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கான சட்டம் தான், இதில் கிறுஸ்துவர்களுக்கும் சேர்த்து தான் குடியுரிமை வழக்கப்படுகிறது, ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள கிருஸ்துவர்கள் ஊர்வலம் செல்வதை புரிந்து கொள்ளமுடியவில்லை, இது தவறு என சுட்டிக்காட்டிய பேராசிரியர்.

மேலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கிருஸ்துவ தேவாலயங்களில் வலியுறுத்தப்படுகிறது, ஆனால் இந்து கோவில்களில் எந்த ஒரு பூசாரியும் இது போன்று நடந்து கொள்வதில்லை, அப்படியெல்லாம் கூற வேண்டாம் என பாதிரியார்களிடம் கோரிக்கை வைத்த பேராசிரியர், மேலும் ஆன்மிக சமய அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும் அதே போன்று மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கட்டும்,பாஜக கூட அணைத்து சமூக மக்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்று தான் நாங்கள் தெரிவித்து வருகின்றோம்.

இந்து மதம் சகிப்பு தன்மை கிடையாது, ஏற்று கொள்ள கூடிய தன்மை என சுவாமி விவேகானந்தர் கூறியதை சுட்டிக்காட்டிய பேராசிரியர், இதை தான் பாஜகவும் பின்பற்றுகிறது, அதனால் கிருஸ்துவ அமைப்புகள், தேவாலயங்கள், பாதிரியார்கள் அனைவரும் பாஜகவுடன் உரையாடலுக்கு தயாராக வேண்டும் வேளாங்கன்னி தேவாலயத்தில் நடந்த பாதிரியார்கள் சந்திப்பின் போது பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.