வியாபாரிகளே உஷார்.! ஓசி பிரியாணிக்கு திமுகவினர் சண்டை, மறுநாள் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து.! எச்சரித்த எடப்பாடி.!

0
Follow on Google News

திமுகவினர் 10 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாததால் கோரப்பசியில் உள்ளார்கள் .மக்கள் கவனமாக இருந்து தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், போரூர் சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாது:- தற்போது வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்து வருகின்றனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கடை கடையாக வசூல் செய்ய நோட்டு புத்தகத்தை தூக்கி விடுவார்கள்.

வியாபாரிகளே உஷாராக இருங்கள். தி.மு.கவினர் ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு சண்டை போடுகிறார்கள். கடைக்காரரை தாக்குகிறார்கள். அதற்கு மறுநாள் ஸ்டாலின் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் சிறந்த தொண்டர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மக்களின் பிரச்சனைகளை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்து, அதனை தீர்ப்பவர்கள் தான் கழக தொண்டர்கள். ஆனால் தி.மு.கவில் அப்படியா இருக்கின்றது. ஆட்சி வருவதற்கு முன்பாகவே இவ்வளவு அட்டூழியம் செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மாதியாக வாழ முடியுமா, வாழத்தான் விடுவார்களா. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை, சாதாரண பசி அல்ல கோரப்பசியில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் கவனமாக இருந்து தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.

தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ரூ.1000 உதவித்தொகை, 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொடுத்த ஒரே அரசு, இந்தியாவிலேயே எங்களுடைய அரசு தான்.

கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. அந்த வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதற்கு பின்பு அம்மாவின் அரசும் நல்ல பலத்திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வருகின்றது. மக்களுக்கு கொடுப்பது கழகம். மக்களிடமிருந்து எடுப்பது தி.மு.க.இந்த ஆட்சி 1 மாதகாலம், 6 மாதகாலத்தில் போய்விடும் என்றார்கள். தற்போது 4 ஆண்டு காலத்தை நிறைவு செய்ய உள்ளது. தற்போது இந்த 4 ஆண்டுகாலம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தோம். கடுமையான குடிநீர் அதையும் தீர்த்து வைத்தோம். அதேபோல புயல் பாதிப்புகள் அதனையும் சீர் செய்து வெற்றி கண்டோம். கொரோனா தொற்று நோய் அதையும் குறைத்துள்ளோம். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.