கரூர் விவகாரத்திற்கு பின்பு ஒரு மாதத்திற்கு மேல் அமைதியாக இருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சமீபத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தன்னுடைய அரசியல் ஆட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார். ஆனால் கரூர் விவகாரத்திற்கு முன்பு வரை எங்கள் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என மத்தியிலும் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக இரண்டு காட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து வந்த விஜய், கரூர் விவகாரம் பின்பு நடந்த சிறப்பு பொது குழு கூட்டத்தில், திமுகவை மட்டும் மிக கடுமையாக விமர்சனம் செய்தவர் பாஜக குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
இதன் பின்னணியில் நடத்த அரசியல் ட்விஸ்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது கரூர் விவகாரத்திற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியுடன் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த விஜய், காங்கிரஸ் நம்முடன் கூட்டணிக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கையில் பாஜக – திமுக இரண்டு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து வந்தார். ஆனால் காங்கிரஸ் விஜய் உடன் கூட்டணிக்கு சென்று விடுவோம் என திமுகவை மிரட்டி தொகுதியை அதிகரிக்க பயன்படுத்தி கொண்டதே தவிற, விஜய் உடன் கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்து வந்தது.

இந்நிலையில் கரூர் விவகாரத்திற்கு பின்பு, விஜய்யை தொடர்பு கொண்ட டெல்லி பாஜக தலைமை, நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில். காங்கிரஸ் கூட்டணிக்கு வரவில்லை என்றால் அதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைத்து விட வேண்டும் என்கிற முடிவை எடுத்த விஜய். காங்கிரஸிடம் காலம் தாமதம் செய்யாமல் கூட்டணியை உறுதி படுத்துங்கள், இல்லை என்றால் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்கிறோம் என காங்கிரசை இறுக்கி பிடித்தார் விஜய்.
ராகுல் காந்தி இரண்டு முறை விஜய்யுடன் பேசி இருந்தால், தேர்தல் நெருங்கட்டும் என கூட்டணியை விஜய்யிடம் உறுதி செய்யாமல் இருந்தார். மேலும் திமுக உடன் ராகுல் காந்தி நெருங்கிய நட்பில் இருப்பதால், திமுக கூட்டணியில் தொடரலாம், திமுக கைவசம் 20க்கு மேற்பட்ட எம்பிக்கள் உள்ளனர், நமக்கு இவர்கள் ஆதரவு தேவை என்கிற நோக்கில், ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியிலே தொடருவோம் என ராகுல் காந்தி முடிவு எடுத்து இருக்கிறார்.
ஆனால் தென் மாநிலங்களை சேர்ந்த கேரளா, புதுசேரி, தமிழ்நாடு, ஆகிய மூன்று மாநிலத்தை சேர்ந்த மூத்த, முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக பிரியங்கா காந்தியிடம் பேசி இருக்கிறார்கள். விஜய் உடன் கூட்டணி வைத்தால், தமிகத்தில் அதிக தொகுதியில் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழகத்தில் துணை முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் பங்கு கிடைக்கும், மேலும் விஜய்க்கு கேரளா, புதுசேரியில் செல்வாக்கு நம்முடன் கூட்டணி அமைத்தால் புதுசேரி, கேரளா இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசிய பிரியங்கா காந்தி தனக்கு வந்த தகவலை தெரிவித்து இனி தென் மாநில அரசியலை நான் பார்த்து கொள்கிறேன் என தெரிவித்தவர், உடனே நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். தமிழகத்தில் உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்கிறோம், கேரளா மற்றும் புதுவையில் எங்களை முதல்வர் வேட்பாளரை ஏற்று கொள்ள வேண்டும் என பிரியங்கா தெரிவிக்க, அதற்கு விஜய் தமிழ்நாடு – கேரளா இரண்டும் நீங்க போட்ட கண்டிஷன் ஓகே புதுச்சேரி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேசுவோம் என விஜய் சொல்லிவிட்டதால், கிட்டத்தட்ட தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.




