என்னை மிரட்டி அப்படி செய்ய சொன்னார்… ஜாய் கிறிஸில்டா குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் ஓப்பன் டாக்… ஓ… இது விஷயமா.?

0
Follow on Google News

பிரபல சமையல் கலை நிபுணர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா புகார் அளித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்த ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையத்தின் முன் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார். எனக்கு பிறந்த குழந்தையின் தந்தை நான்தான் என்றும் ஒப்புக் கொண்டதாகவும் டிஎன்ஏ ஆதாரம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஒரு வலுவான அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருப்பதாவது, மகளிர் ஆணையத்தின் முன் எந்த விதமான ஒப்புதலையும் நான் அளிக்கவில்லை. ஜாய் கிறிஸில்டாவை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவதூறு செய்வதற்காகவே என்னை ஜாய் மிரட்டினார். அந்த மிரட்டலின் பேரிலேயே இந்த திருமணம் நடந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் இதுகுறித்து கடந்த செப்டம்பரில் ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனிலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நான் வாக்குமூலம் அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டல் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதை உறுதியாக கூறியுள்ளேன். மாதத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை மற்றும் பிஎம்டபிள்யூ கார் இஎம்ஐ ரூ 1.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஜாய் கோரியதையும் நான் மறுத்தேன்.

நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுக்கவில்லை. அந்த குழந்தை என்னுடையது என நிரூபிக்கப்பட்டால் அவனை வாழ்நாள் முழுவதும் நான் கவனித்துக் கொள்வேன். மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உண்மையை நிரூபிக்க அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன் என்று மாதம்பட்டி ரங்கராஜ் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அதனால் மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸில்டா தொடர்பான இந்த வழக்கு இப்போது சமூக வலைதளங்களிலும் சட்ட வழிகளிலும் முக்கிய விவாதமாக மாறி உள்ளது. உண்மை யாருடைய பக்கம் உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிவருகின்றனர். இந்நிலையில் இவர்களது விவாகரம் குறித்த வழக்கில் விசாரணையின் முடிவில் நீதிமன்ற தீர்ப்பில்தான் உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்ததாகவும், எனது குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிறிஸில்டா கூறுகிறார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜூக்கு முதல் திருமணம் நடந்ததே தனக்கு தெரியாது என்றும் அதை மறைத்துதான் என்னை திருமணம் செய்துக்கொண்டார் என்றும் புகாரில் கூறியிருக்கிறார். திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ள பிரபலமான ஒருவரை காதலித்த அவர், திருமணமானவர் என்பதே தெரியாது என்று சொல்வது முரண்பட்டதாகவே இருந்து வருகிறது.

அதே போல் தன்னிடம் பணம் பறிக்கவும் அவதூறு பரப்பி தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், மிரட்டல் விடுத்து தன்னை திருமணம் செய்துக் கொண்டதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கையில் கூறியிருப்பதும் முரண்பட்ட ஒரு தகவலாகவே உள்ளது. இப்படி ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அவர்கள் வெளியிடும் தகவல்களே ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருப்பதால் சமூக வலைதளங்களில் அது பேசுபொருளாக விவாதமாக மாறி வருகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பது நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வரலாம்.