CIA சதி திட்டம்… நூலிழையில்உயிர் தப்பிய பிரதமர் மோடி… உயிரை காப்பாற்றிய ரஷ்ய உளவுத்துறை..

0
Follow on Google News

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தொடர்பிலும் நூலிழையில் உயிர் தப்பிய அவர் உயிர் தப்பிய விவகாரம் சர்வதேச அளவில் மிக பெரிய பரபரப்பான செய்தியாக வெளியாகி விவாதப்பொருளாக மாறியது. பாக்கிஸ்தான் – இந்தியா இடையில் நடந்த சமீபத்திய பகல்ஹாம் தாக்குதலுக்கான பதிலடி சண்டையில், பாகிஸ்தான் உள்ளே புகுந்து அந்த நாட்டை துவசம் செய்தது இந்தியா.

பாக்கிஸ்தான் மன்றாடி கேட்டதின் விளைவாக இந்தியா போரை நிறுத்தியது. ஆனால் தன்னால் தான் இந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என இந்தியா தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுக்க, பிரதமர் மோடி மறுத்துவிட்டார், உடனே இந்தியாவுக்கு எதிராக வரி உயர்த்தப்படும் என ட்ரம்ப் மிரட்டலுக்கும் பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சமீபத்தில் சீனா சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான தீட்டப்பட்ட மிக பெரிய சதி திட்டத்தை, சீனாவின் புலனாய்வு அமைப்பிற்கு ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பு தகவல் வழங்கி இருக்கிறது, மேலும் இந்த தகவல் உடனடியாகவே ரஸ்யா அதிபர் புடினுக்கு தெரிவிக்கப்பட்டு, இந்தியா பிரதமர் மோடி உயிருக்கு மிக பெரிய ஆபத்து இருக்கிறது என்றதும், உடனே புடின் அவருடைய வாகனத்தில் பாதுகாப்பாக இந்தியா பிரதமர் மோடியை அழைத்து சென்று இருக்கிறார்.

உடனடியாகவே பிரதமர் மோடியை தனது வாகனத்தில் ரசியா அதிபர் புடின் ஏற்றியிருக்காது விட்டால் அன்று மிகப்பெரிய ஆபத்து பிரதமர் மோடிக்கு நிகழ்ந்து இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியபோது, ​​செமிகண்டக்டர் மாநாடு ஒன்றில் பேசுகையில் எழுப்பிய கேள்வி இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பல ஊகங்களுக்கு வித்திட்டது.

அந்த மாநாட்டில் நீங்கள் கைதட்டுவது நான் சீனாவுக்கு போனதற்காகவா? இல்லை பத்திரமாக திரும்பி வந்ததற்காகவா?” என்று பிரதமர் மோடி பேசியது, அவர் சீன பயணத்தின்போது ஏதோவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலை உணர்ந்திருக்கிறார் என்பதை உறுதி படுத்துகிறது.பிரதமர் மோடியின் இந்த கேள்வியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி அளிக்கும் சில தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் சீன பயணம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், அதே ஆகஸ்ட் 31-ஆம் தேதி பங்களாதேஷின் டாக்காவில் நடந்த மர்ம மரணங்கள் இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. டாக்காவில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதியில், வங்கதேச படைகளுக்கு பயிற்சி அளிக்க வந்த ஒரு சிஐஏ உளவாளி திடீரென இறந்து கிடந்தார்.

அவரது உடலில் காயம், துப்பாக்கி சூடு போன்ற தடயங்கள் இல்லை. ஆனால், அவர் அருந்திய பானத்தில் பொலோனியம் என்ற கதிரியக்க ஐசோடோப் கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உளவாளிகளை தீர்த்துக்கட்ட ரஷ்ய உளவுத்துறை இதுபோன்ற பொலோனியத்தை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றது. அதே நாளில், டாக்காவில் உள்ள மற்றொரு விடுதியில் ஒரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் இறந்த அமெரிக்க உளவாளி, சீனாவில் பிரதமரை கொல்வதற்காக சிஐஏ-வால் அனுப்பப்பட்டவர் என்றும், இதை ரஷ்ய உளவுத்துறை கண்டறிந்து இந்திய உளவுத்துறையான ராவிடம் தெரிவித்ததாகவும், ரஷ்யா மற்றும் ரா-வின் கூட்டு முயற்சியால் அந்த உளவாளி கொல்லப்பட்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.