மிரட்டி மதப்பட்டி ரங்கராஜை அப்படி செய்ய வைக்கல… அவரே விருப்பப்பட்டு தான் செய்தார்… வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ஜாய் …

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சையிலும் கடும் விமர்சனங்களிலும் சிக்கி வருபவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜாய் கிறிஸில்டாவை மிரட்டல் காரணமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை தன்னுடைய குழந்தை அல்ல என்றும் கூறியது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோ ஒன்றை ஜாய் கிறிஸில்டா இப்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிறங்கிப் போய் மிகவும் கிறக்கமான குரலில், முகபாவனையில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசியிருக்கிறார். ஏய் பொண்டாட்டி, நீ எவ்ளோ அழகுன்னு தெரியுமா? அவ்ளோ அழகு. அவ்ளோவ் என்கிறார். பிறகு கேமராவுக்கு முன் கைநீட்டி சுற்றி வளைத்து கன்னத்தில் வைத்து நெட்டி முறிக்கிறார். அதாவது அந்த அழகுக்கு திருஷ்டி கழிப்பது போல மாதம்பட்டி ரங்கராஜ் அதில் பாவனை செய்கிறார்.

மேலும் அந்த வீடியோவில், சீக்கிரம் வந்துடு, ரொம்ப மிஸ் பண்றேன். மிஸ் யூ. ரெடி ஆயிட்டேன் என்று கூறிவிட்டு டிப்டாப் ஆக உடையணிந்திருப்பதை வாசல் படிக்கட்டில் உட்கார்ந்தபடி அந்த வீடியோவில் காட்டுகிறார். பிறகு உதட்டை குவித்து முத்தமிட்டு லவ் யூ என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிடும் இதுபோன்ற கிறக்கமான காதல் வீடியோக்களில் பொண்டாட்டி பொண்டாட்டி என்பாரே தவிர, பொண்டாட்டி பெயரை சொல்லாமல் கவனமாக தவிர்த்து விடுகிறார்.

இதுகுறித்து பேசிய ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் வெளியூர் செல்லும்போதெல்லாம் இது போன்ற வீடியோக்களை மிஸ் யூ பொண்டாட்டி என்று தனக்கு அனுப்பியதாக கூறியிருக்கிறார். இதுதொடர்பாக 3 தொடர் வீடியோக்களை ஜாய் கிறிஸில்டா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க. இதுல லவ்வுல பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுகிறாரா? கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி என்று அந்த வீடியோவுக்கு ஜாய் கிறிஸில்டா கேப்சன் எழுதியுள்ளார்.

மேலும் வீடியோவில் ஜாய் கிறிஸில்டா கூறுகையில், மாதப்பட்டி ரங்கராஜ் கூறிய சில விஷயங்களில் முழுமையான உண்மையை சொல்லவில்லை. மக்கள் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். நான் பகிரும் ஒவ்வொரு விஷயங்களும் ஆதாரங்களுடன் தான் இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரின் இந்த பதிவு வெளியானவுடன் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களிலேயே கடும் விவாதம் எழுந்துள்ளது.

ஒரு தரப்பினர் ஜாய் கிறிஸில்டாவின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். மாதம்பட்டி ரங்கராஜின் ஆதரவாளர்களாக உள்ள மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதில் 2ம் பாகம் 3ம் பாகம் வீடியோக்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஜாய் கிறிஸில்டா அறிவித்துள்ளார். அதனால் இவர்களை பற்றிய விவாதம் இணையத்தில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஜாய் கிறிஸில்டா விஎஸ் ரங்கராஜ் என்கிற ஹாஷ்டாக் டிரெண்டிங் ஆகி வருகிறது. மொத்தத்தில் இந்த புதிய வீடியோ வெளியீடு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.