தீபா தூணில் தீபம் ஏற்ற நாள் குறித்த மோடி… மகிழ்ச்சியில் முருக பக்தர்கள்… மதுரை வந்து சென்ற பின்பு அதிரடி…

0
Follow on Google News

சமீபத்தில் மதுரைக்கு வருகை தந்த பிரதமர் மோடி தமிழக வளர்ச்சிக்காக சுமார் 4400 கோடிக்கு மேல் ஐந்து முக்கிய திட்டங்களை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோது தமிழக மக்களுக்கு வாரி வழங்கி வரும் பிரதமர் மோடி வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் இன்னும் பன்மடங்கு இந்த தமிழக மக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்குவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தமிழக மக்கள்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழ் கடவுளான முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அங்கே முருகப்பெருமானை வணங்கி வழிபட்டார், அது மட்டும் இன்றி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூனில் உயர்நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, தன்னைத்தானே தீயிட்டு பலியான பூரண சந்திரன் பெயரை பொதுக்கூட்ட மேடையிலே பேசி நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.

அது மட்டுமின்றி பூரண சந்திரன் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி. அந்த வகையில் திருப்பரங்குன்றம் முருகன் மலை யாருக்கு சொந்தம் என்கின்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமீபத்தில் பிரதமரின் திருப்பரங்குன்றம் விசிட் என்பது குன்றம் மலை முழுவதுமே குமரனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

பொதுக் கூட்ட மேடையில் பேசிய பிரதமர் மோடி, தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற கடுமையாக களப்பணியாற்றி வரும் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்திருந்தது. மேலும் கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சி ஊழலின் ஒட்டுமொத்த வடிவமாக திகழ்வதையும்,

தொடர்ந்து இந்துக்கள் வழிபாட்டு உரிமைகளை திமுக முடக்குவதையும் ஆதாரத்துடன் தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி, அதே நேரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் விருப்பமான நகரமான மதுரை மாநகரத்தை இன்று குப்பை கிடங்காக திமுக வைத்துள்ளதை சுட்டிக்காட்டி வேதனையும் அடைந்தார் பிரதமர் மோடி.

அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு தமிழக நலத்திற்காக கொண்டுவரும் பல திட்டங்களை திமுக வரவிடாமல் தடுத்து முட்டுக்கட்டை போடுவதையும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் பேசி இருந்தார் பிரதமர் மோடி, இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டு, போதை கும்பலின் அராஜகம் ஒழிக்கப்பட்டு, பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தமிழக மக்களுக்கு உறுதி அளித்தார் பிரதமர் மோடி .

அதே நேரத்தில் அடுத்த வருடம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரிய கார்த்திகை தீபத்தூனில் தீபம் ஏற்றப்படும் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதியும் அளித்த பிரதமர் மோடி. இறுதியாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றப்படும் நாள் மற்றும் தமிழக மக்களின் வாழ்வில் ஜொலிக்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை என பேசி தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டி சென்று இருக்கிறார் பிரதமர் மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here